Friday, October 21, 2011

தமிழா! இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்!

OCT 20, ஈழத்தமிழர்களின் 35 வருடகால போராட்டத்தை ஒரு சிலநாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நமது வ(பு)ல்லரசு இந்தியாவுக்கே சேரும்.

இலங்கையின் பயங்கரவாதி ராஜபக்சே தலைமையில் ஒரு ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள தமிழர்கள் அனுதினமும் தங்கள் இன்னுயிரை கையில் பிடித்தபடி வாழ்கிறார்கள். பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள். கிரீஸ் மனிதன் என்கிற பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் தமிழ் பெண்களின் மானத்தை பறிக்கின்றனர்.

தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கில் மாவிரர்கள் (போராளிகள்) தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். அவர்கள் வாழவேண்டிய வயதில் தங்கள் இன்னுயிர்களை ஏன்? கொடுத்தார்கள். அவர்களின் தியாகம் வீண் போய்விட்டதா? அந்த மாவிரர்கள் செய்த தவறுதான் என்ன? தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தது தவறா?

இலங்கை தமிழர்களின் தாய் மண். சிங்கள காடையர்கள் அந்த நாட்டின் வந்தேறிகள். வந்தேறிகள் அந்த நாட்டை ஆக்கிரமித்து கொண்டு மண்ணின் மைந்தர்களை அடிமைபோல் நடத்தினார்கள். அதுமட்டுமில்லாது கலவரங்கள் மூலம் அவர்களை கொன்றும் குவித்தார்கள். இந்தியாவில் எப்படி ஹிந்துத்துவா வந்திரிகள் முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்று குவிக்கிறார்களோ அதுபோல.

இதை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் பல்லாண்டுகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டங்களை சிங்கள நாசி அரசாங்கமும், அதன் எவலாளிகளும் தங்கள் கால்களில் போட்டு நசுக்கினார்கள். இதை பொறுக்க முடியாமல் தமிழர்கள் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி தமிழர்களுக்கு என்று ஒரு நாடும் அமைத்து சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்களை கண்டு நடுங்கும் அளவுக்கு சிறப்பாக ஆட்சியையும் செய்தார்கள். அதை கண்டு பெருக்கமுடியாத இந்திய கழுகு சிங்களர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்து அந்த போராட்டத்தை முடிவுக்கும் கொண்டுவந்தது.

ஈழத்தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழகத்து உறவுகளால் வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. இது வரலாற்றில் இந்திய தமிழர்கள் மேல் ஒரு கரையாகவே படிந்து விட்டது. தமிழர்கள் என்பது ஒரு இனம்தானே பின்னே ஏன்? நான் இந்தியா தமிழன், இலங்கை தமிழன் என்று பிரித்து சொல்கிறேன் என்றால் அப்படி சொல்லும் அளவுக்குத்தான் இந்திய தமிழகர்கள் நடந்து கொண்டார்கள். அவர்களால் தங்கள் இனமக்கள் கொல்லப்படும்போது பாரிய அளவில் எதிர்ப்புகளை காட்டமுடியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் அன்று ஒரு முடிவு எடுத்திருக்கவேண்டும். இந்தியா ஈழத்தமிழர்கள் விசயத்தில் சரியான முடிவெடுக்கவில்லை என்றால் தமிழகம் இந்தியாவோடு இல்லை என்பதை அறுதியிட்டு சொல்லியிருக்க வேண்டும் அதை செய்யாததால் வந்த வினையே இத்தனையும்.

தமிழா இனி நீ இந்திய தமிழன் இல்லை. உனக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் இனமக்களை கொல்ல உறுதுணையாக இருந்த இந்தியாவுடன் உனக்கு எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை. இனிமேல் நீ இந்தியாவுக்கு அந்நியன். தமிழா! உன்மேல் படிந்த கரையை துடைக்கும் பொறுப்பு உனக்குண்டு. அதை நீ மறுக்கவும், மறக்கவும் முடியாது. ஈழத்து தமிழர்கள் தங்கள் விகிதாசாரத்துக்கு அதிகமாக ரத்தம் சிந்திவிட்டனர். அவர்களால் மீண்டும் இந்த போராட்டத்தை வடிவமைக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. தமிழகத்து தமிழர்களே உங்கள் மீது உள்ள கரையை துடைக்க நீங்கள்தான் இனி ஈழத்து போராட்டத்தை எல்லா முனைகளிலும் முன்னெடுக்க கடமைப்பட்டவர்கள். வெறும் ஜனநாயகத்தை நம்பி, வெற்று அரசியல்வாதிகளின் மாய்மாலங்களில் ஏமாந்து விடாமல் வீரத்தோடும், விவகத்தொடும் செயல்படும் ஒரு மக்கள் இயக்கம் தமிழகத்திலே கட்டியமைக்கப்பட வேண்டும்.

இந்த தமிழர் இயக்கமே பிற்காலத்தில் இலங்கையை கைபற்றபோகும் ஒரு இயக்கமாக வளரவேணும். இதற்குண்டான எண்ணமும், சிந்தனையும் உள்ள இளஞசர்கள், சிந்தனையாளர்கள் ஒன்று திரள வேண்டும். இதுவே நமது ஆவல். ஈழத்தின் சுதந்திரத்திற்க்காக உயிர்த்தியாகம் செய்த மாவிரர்களின் தியாகங்களை மனதில் கொண்டு வீரத்தோடு எழுந்து நிற்ப்போம். தமிழா! ஒன்றுபடு.
-நட்புடன் மலர்விழி-

0 comments:

Post a Comment