
காஸா பகுதியை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸ் நிர்வாகம் இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் தான் சிறை பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவனை விடுவிக்க இணங்கியுள்ளது. இஸ்ரேல் முதல் கட்டமாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாளை செய்வாய்க்கிழமை இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதேவேளை ஹமாஸ் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஸ்ஷால் இஸ்ரேலுடன் ஹமாஸ் மேற்கொண்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் பங்காற்றிய எகிப்த்திய புலனாய்வு பிரிவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதேவேளை இஸ்ரேல் புதிய குடியேற்ற திட்டங்களை நிர்மாணிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இஸ்ரேல் வெளியிட்டுள்ள விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்ப் பட்டியலில் ஆயுட் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுட்தண்டனைகளை பெற்றுள்ள கைதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றனர் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களால் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாது எனத் தெரிகிறது.இவர்கள் வேறு நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment