Showing posts with label ourummah. Show all posts
Showing posts with label ourummah. Show all posts

Monday, October 17, 2011

இஸ்ரேல் 1027 கைதிகளை விடுவிக்க இணங்கியுள்ளது


OurUmmah: இஸ்ரேலை சூழவுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி குறிப்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இஸ்ரேலை ஆட்டம் காணவைத்துள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக இஸ்ரேல் 1027 பலஸ்தீன ஆண் , பெண் கைதிகளை விடுவிக்க இங்கியுள்ளது. இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாடு உருவாக்கப்பட்டது முதல் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் எதிலும் பிடிவாதத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது இஸ்ரேல் இந்த நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான பிரதான காரணமாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சி பிரதான காரணமாக சுட்டிக்காட்டப் படுகின்றது .
காஸா பகுதியை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸ் நிர்வாகம் இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்   தான் சிறை பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவனை விடுவிக்க இணங்கியுள்ளது. இஸ்ரேல் முதல் கட்டமாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கையை  ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாளை செய்வாய்க்கிழமை இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என  பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதேவேளை ஹமாஸ் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஸ்ஷால் இஸ்ரேலுடன் ஹமாஸ் மேற்கொண்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் பங்காற்றிய எகிப்த்திய புலனாய்வு பிரிவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதேவேளை இஸ்ரேல் புதிய குடியேற்ற திட்டங்களை நிர்மாணிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இஸ்ரேல் வெளியிட்டுள்ள விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்ப் பட்டியலில் ஆயுட் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுட்தண்டனைகளை பெற்றுள்ள கைதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றனர் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களால் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாது எனத் தெரிகிறது.இவர்கள் வேறு நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது