Tuesday, March 5, 2013

தொடரும் இந்தியாவின் கபட நாடகம்!


     மார்ச் 3/2013: போர்க்குற்றம் தொடர்பான ஆவணப் படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வெள்ளிக் கிழமை அன்று திரையிடப்பட்டது.

     இந்நிலையில், விரைவில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இதை சீர்குலைக்கும் முயற்சியாகவும், இலங்கைக்கு நல்ல பெயரை உண்டாக்கவும் இந்தியா முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது.

     இதன் ஒருபகுதியாகத்தான் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி, ராஜபக்சேவுக்கு அரசு முறை அழைப்பு என்று இந்தியா பல்வேறு தகடுதித்தங்களை செய்து உலகிற்கு ராஜபக்சேவை நல்ல மனிதானாக காட்டும் கேவலமான வேலையை செய்து வருகிறது.

     சேனல் 4 ஆவணப்படங்கள் இறுதி போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்கிறது. அப்படி இருக்க, இந்தியா மனசாட்சியே இல்லாமல் தனது அண்டை நாட்டில், தங்கள் கண் முன்னரே ஒரு சிறு இனம் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்ததோடு நில்லாமல், அதை நியாயப்படுத்த சம்மந்தப்பட்டவர்களுக்கு உதவும் மனித நேயமற்ற இழிசெயலை இப்பொழுது செய்துவருகிறது.

     இந்நிலையில் கோமாளி சுப்பிரமணிய சுவாமியை இது விசயத்தில் துணைக்கு அழைத்திருக்கிறது இலங்கையும், இந்தியாவும. அதன் ஒருபகுதியாக, திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டுக்கு வந்திருந்த சு சுவாமி ராஜபக்சே தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்கும் அளவுக்கு நல்லவர் என்கிற பிரச்சாரத்தை கட்டவில்துள்ளார். நான் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக வலியுறுத்தி வருகிறேன். அது என்னால்தான் முடியும்.என்று தெரிவித்தார். ஏதோ இந்த கோமாளி சொல்லியதும் ராஜபக்சே அப்படியே கேட்டுவிடுவது போல உளறி கொட்டி இருக்கிறார். thanks, sinthikkavum

0 comments:

Post a Comment