Wednesday, March 13, 2013

சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்திற்கு [UAPA] எதிராக சென்னையில் நடந்த கருத்தரங்கம்!

                     

      சிவில் உரிமை பாதுகாப்பு குழு(சி.பி.சி.எல்) சார்பாக யு.ஏ.பி.ஏவுக்கு (சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) எதிரான கருத்தரங்கம், சென்னையில், ஹை கோர்ட் எதிர்புறம் YMCA ஹாலில் வைத்து நடைபெற்றது. வழக்கறிஞர் சங்கரசுப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ் முக்கிய உரை நிகழ்த்தினார். எஸ்.சி-எஸ்.டி தேசிய கமிஷன் முன்னாள் தலைவர் பி.டி.சர்மா ஐ.ஏ.எஸ்(ஓய்வு), என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப், வழக்கறிஞர் பானுமதி, வழக்கறிஞர் வின்சென்ட் ஜோசப் [கேரளா], டாக்டர் ஆனந்த் டெல்டும் தய் ஆகியோர் உரை நிகழ்த்தினர். வழக்கறிஞர் கேசவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

யு.ஏ.பி.ஏவின் சில பிரிவுகள் மனித உரிமையை மீறுவதாகும் என்று வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் கூறினார். அனைத்து கறுப்புச் சட்டங்களையும் வாபஸ் பெறக்கோரி எம்.பிக்களின் வீடுகளை நோக்கி பேரணி நடத்தவேண்டும் என்று அவர் கூறினார். அண்மையில் சி.பி.சி.எல் உறுப்பினர் கோபாலை கேரள போலீஸ் யு.ஏ.பி.ஏ சட்டத்தின் படி கைதுச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ் [இடமிருந்து வலமாக]



NCHROவின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் உரையாற்றியபோது


வழக்கறிஞர் சங்கரசுப்பு உரையாற்றியபோது



கேரள வழக்கறிஞர் வின்சென்ட் ஜோசப் உரையாற்றியபோது



எஸ்.சி-எஸ்.டி தேசிய கமிஷன் முன்னாள் தலைவர் பி.டி.சர்மா ஐ.ஏ.எஸ்(ஓய்வு) உரையாற்றியபோது



வழக்கறிஞர் பானுமதி உரையாற்றியபோது

0 comments:

Post a Comment