12 Mar 2013
கொல்லம்:5 நாள் ஜாமீனில் வெளிவந்துள்ள அப்துல் நாஸர் மஃதனி அன்வாருச் சேரியில் தனது பெற்றோர்களை சந்தித்தார்.நோய்வாய்ப்பட்டுள்ள தந்தை அப்துல் ஸமது மாஸ்டர் மற்றும் தாயார் அஸ்மாபீவி ஆகியோரை சந்தித்த மஃதனி அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டார்.
மதிய தொழுகையான லுஹரில் தலைமை வகித்த அப்துல் நாஸர் மஃதனி தொழுகைக்கு பிறகு நடந்த பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார். “நான் குற்றவாளி என்றால் என்னை தண்டித்துவிடு. நான் நிரபராதி. தேசத் துரோகம் குற்றம் சாட்டி அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றார்கள்.பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் நாங்கள். நீதிக்காக மரணிக்கவும் தயார்” என்று மஃதனி பிரார்த்தனையின்போது கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்தவர்களுடன் நலம் விசாரித்துவிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். இன்று அவர் சிறைக்கு திரும்புவார் என்று பி.டி.பி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment