கர்நாடகா மாநிலத்தின் 3 மாநகராட்சிகளின் 6 வார்டுகளில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.பெங்களூர் மெட்ரோ கார்ப்பரேசனில் ஏற்கனவே எஸ்.டி.பி.ஐக்கு ஒரு கவுன்சிலர் உள்ளார். இரண்டு சிட்டி நகராட்சிகளில் ஐந்து வார்டுகளிலும், 3 டவுன் நகராட்சிகளில் ஐந்து வார்டுகளிலும், டவுன் பஞ்சாயத்தில் ஒரு வார்டிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.2010-ஆம் ஆண்டு நடந்த கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் 67 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது நகரப் பகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மூன்று பஞ்சாயத்துகளின் தலைவர்கள் பதவிகளில் வீற்றிருப்பதும் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் ஆவர்.
மங்களூர் மாநகராட்சியில் காங்கிரஸின் தற்போதைய மேயர் குல்ஸாரை 635 வாக்குகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் தோற்கடித்துள்ளார். மைசூர் மாநகராட்சியில் 4 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.குல்பர்கா மாநகராட்சியில் ஒரு இடத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றியை ஈட்டியுள்ளது.
சாமராஜ் நகர் சிட்டி நகராட்சியில் போட்டியிட்ட எட்டு வார்டுகளில் 4 வார்டுகளை எஸ்.டி.பி.ஐ கைப்பற்றியுள்ளது. இங்கு எஸ்.டி.பி.ஐயின் ஆதரவில்லாமல் யாராலும் ஆளமுடியாது. ஷிமோகா சிட்டி நகராட்சியில் ஒரு வார்டில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது. பந்த்வால் டவுன் நகராட்சியில் மூன்று வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.
கோலார் மாவட்டத்தில் முல்பாக் டவுன் நகராட்சியில் ஒரு வார்டிலும், உல்லாள் டவுன் நகராட்சியில் ஒரு வார்டிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.சுள்ளியூ டவுன் பஞ்சாயத்தில் பிரபல அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு ஒரு இடத்தை எஸ்.டி.பி.ஐ கைப்பற்றியது. மாநகராட்சி வார்டுகளில் நான்கிலும், சிட்டி நகராட்சி வார்டுகள் ஐந்திலும் எஸ்.டி.பி.ஐ 2-வது இடத்தை ப்பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment