![]() |
இலங்கையில் நடத்த பட்ட இனபடுகொலைக்கு எதிராக அமெரிக்கா ஐநா சபையில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும்,இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான் தலைமையில் மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா,மாவட்ட பொது செயலாளர் அன்வர் முகைதீன்,மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முஹம்மத்,சிந்தா,பாளை தொகுதி தலைவர் அப்துல் மற்றும் தொகுதி ,நகர நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்தனர் அப்பொழுது அவர்கள் இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ எப்பொழுது உங்களுடன் இருக்கும் என மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா கூறினார்
![]() |
![]() |
0 comments:
Post a Comment