24 Mar 2013
யங்கூன்:மத்திய மியான்மரின் மிக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த கலவரம் தீவிரமடைந்து வருகிறது. இதர நகரங்களுக்கும் கலவரம் பரவுவதாகவும், வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இப்பகுதியில் ஆட்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. சிலர் இங்கிருந்து வேறு இடங்களுக்கு புலன் பெயருகின்றனர். நேற்று இப்பகுதியில் உள்ள 2 மஸ்ஜிதுகளையும், ஏராளமானவீடுகளையும் வன்முறையாளர்கள் தீவைத்து அழித்தனர். சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் மியான்மர் அரசுக்கு இனக்கலவரம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் மேற்கு மியான்மரின் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் அரசு கடுமையான பாரபட்சத்தை கையாளுவதாக சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது. போலீசும், ராணுவமும் புத்த தீவிரவாதிகளுக்கு உதவி அளித்தன.
புதன் கிழமை மீக்திலாவில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் நகைக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வகுப்புக் கலவரத்தில் முடிந்தது. தங்க நகை வாங்க வந்த புத்தர்களுக்கும் கடையில் இருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீதிக்கு வந்தது. இப்பகுதியில் 1200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டுவெளியேறி ஸ்டேடியம் மற்றும் போலீஸ் ஸ்டேசன்களில் தற்காலிகமாக ஏற்பாடுச் செய்யப்பட்ட முகாம்களில் தங்கியிருப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும் அப்பகுதி எம்.பியுமான வின் ஹெதின் கூறுகிறார். ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் கலவரம் குறித்து துக்கம் மற்றும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment