Sunday, March 10, 2013

துனீசியா நெருக்கடி தீர்ந்தது:புதிய அரசு உருவாக்க அரசியல் கட்சிகளிடம் கருத்தொற்றுமை!

10 Mar 2013
 
    துனீசியா:ஒரு மாத காலமாக தொடரும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் துனீசியாவில் அரசியல் கட்சிகளிடையே புதிய அரசை உருவாக்குவதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
 
     நியமிக்கபட்டுள்ள பிரதமர் அலி அல் ஹரைத் அமைச்சர்களின் பட்டியலை அதிபர் முன்ஸிஃப் மர்ஸூகியிடம் அளித்தார். 3 தினங்களில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
 
     இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் வரை செயல்படும். மத்திய-இடது பிரிவான இத்திஹாத்துல் கட்சி, அதிபரின் மதசார்பற்ற கட்சியான காங்கிரஸ் ஃபார் தி ரிபப்ளிக் ஆகிய புதிய அரசில் முக்கிய கட்சிகளாக இடம்பெற்றுள்ளன.
 
     அமைச்சர்களின் பெயரும், அரசின் செயல்திட்டங்களும் அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக ஹரைத் கூறினார். அரசின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய காரியங்கள் குறித்து அரசியல் கட்சிகள் இடையே ஏற்கனவே கருத்தொற்றுமை ஏற்பட்டது. சமரச முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்துறை, சட்டம் ஆகிய துறைகள் சுயேட்சை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும்.
 
     இடதுசாரி தலைவரான சுக்ரி பிலாஇதின் கொலையைத் தொடர்ந்து கடந்த மாதம் துனீசியாவில் அரசியல் நெருக்கடி உருவானது. இதனைத் தொடர்ந்து பிரதமர் ஹமதி ஜபலி பதவியை ராஜினாமாச் செய்திருந்தார்.

0 comments:

Post a Comment