Monday, March 18, 2013

நடித்தது போதும் மிஸ்டர் கருணாநிதி!


                                                                     மார்ச் 18: திமுக தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு 3 பக்க அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். 

 
 
 
 
அக்கடிதத்தில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். ஈழத்தமிழர் விசயத்தில் மத்திய அரசு சரியான முடிவு எடுக்க வில்லை என்றால் காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்காது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    
     இந்நிலையில் இலங்கை விசயத்தில் திமுகவுடன் ஆலோசித்த பிறகே முடிவு என்று இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இலங்கை விஷயம் குறித்து மத்திய அமைச்சர்கள் அந்தோணியும், சிதம்பரமும் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்கள் கருணாநிதி குடும்பம் செய்த ஊழலில் ஒன்றை கிளப்ப போவதாக அறிவிப்பார்கள். உடனே கருணாநிதியின் நாடகம் முற்று பெரும்.

     ஈழத்தமிழர்கள் பிரச்சனை, மற்றும் தமிழக மீனவர்கள் படுகொலை விசயத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞசர்கள், அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், மீனவர்கள் என்று பல்வேறு தரப்பட்ட மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டம் தமிழகம் முழுவதும் பரவத்தொடங்கி விட்டது. இனி இதுவிசயத்தில் மவுனம் காத்தால் இனி காலத்துக்கும் கருணாநிதி குடும்பம் ஆட்சிக்கு வர முடியாது. இதை மனதில் கொண்டு கருணாநிதி டெசோ தொடங்கினார், இப்பொழுது கடித யுத்தம் நடத்துகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
    
     திமுக ஆட்சியில் இருக்கும் பொழுதுதான் ஈழத்து இனப்படுகொலை அரங்கேறியது. அப்பொழுதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் கருணாநிதியை மானம் உள்ள தமிழன் என்று மக்கள் நம்பி இருப்பார்கள். அதைவிட்டு ஈழத்து இனப்படுகொலையை முன்னின்று நடத்திய இந்தியாவிடம் மடிப்பிட்ச்சை கேட்பதால் என்ன பயன். இந்தியா எப்படி தனக்கு எதிராகவே ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்? அப்படியே கொண்டு வந்தாலும் ராஜபக்சே சொல்வார் இந்த போரை நடத்த சொன்னதே இந்தியாதானே என்கிற உண்மையையும், இந்தியா எவ்வாறெல்லாம் உதவி செய்ததது என்கிற தகவல்களையும் கொடுப்பார். இதுவெல்லாம் தெரிந்த அரசியல் வித்தகர் கருணாநிதி இல்லாத ஊருக்கு வழி தேடுகிறார்.

நடித்தது போதும் மிஸ்டர் கருணாநிதி, மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.

0 comments:

Post a Comment