நெல்லை மாவட்டம் பேட்டையையை நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கடைகள் ,மண்டபம்,வீடுகள் என பல இடங்கள் உள்ளன இவைகள் தொடர்ந்து சமுக விரோதிகளின் கையில் சிக்கி மாத வாடகையும் பள்ளிக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது.இந்த பிரச்சினை பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது அண்மையில் நீதிமன்றம் இடம் வக்ப் வாரியத்திற்கு (பள்ளி வாசலுக்கு) உரியது என தீர்ப்பு வழங்கியது .தீர்ப்பில் பள்ளியின் சொத்துக்கள் பள்ளிக்கே சொந்தம் என்றும் அதை உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்வதற்குள் எவ்விதமான கட்டிடங்களையும் இடிப்பது கூடாது என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது, தீர்ப்பு இவ்வாறு இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டிடம் ஒன்றை ஆக்கிரமிப்பாளர்கள் இடித்ததால் பேட்டை முழுவது ஒரு வித பரபரப்பிற்கு உள்ளாக்கப் பட்டது.
ஆனால் தீர்ப்பு வழங்கியும் முஸ்லிம்களில் கையில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது மாவட்ட நிர்வாகம் இதனால் கோபமுற்ற முஸ்லிம் அமைப்புகள் (பாப்புலர் ஃப்ரண்ட்,ம.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ., உம்மத்தே முஸ்லீம் மற்றும் பல அமைப்புகள் )மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் மேலும் முதல்வரின் கவனிக்கும் கொண்டு சென்றனர் .மேலும் இழுத்தடிப்பு செய்தால் போராட்டம் நடைபெறும் எச்சரிக்கை விடுத்தனர் முஸ்லிம் அமைப்புகள். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனே 100 கோடிக்கு மேல் உள்ள நவாப் வாலஜா (வக்ப் வாரிய )சொத்துகளின் ஒரு பகுதியை ஜமாஅத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.பள்ளிவாசல் ஜமாஅத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதால் பள்ளிவாசல் சொத்து மீட்கப்பட்டது.
0 comments:
Post a Comment