இரண்டு இந்திய மீனவ தொழிலாளர்களை சுட்டுக் கொலைச் செய்த வழக்கில் ஜாமீன் பெற்று நாட்டிற்கு சென்ற இத்தாலி கடற்படையினரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர கோரி டெல்லியில் இத்தாலி தூதரகம் நோக்கி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பேரணி நடத்தியது. தீன்மூர்த்தி பவனில் இருந்து துவங்கிய பேரணி சாணக்கியபுரியை அடைந்தவுடன் போலீஸ் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இங்கு எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இரண்டு இந்திய மீனவ தொழிலாளர்களைச் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் தொடர்புடைய இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு அனுப்பி விசாரணையை இத்தாலி சந்திக்கவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐயின் பொதுச் செயலாளர் எ.ஸயீத் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “கடற்படையினரை திரும்ப அனுப்பி வைப்போம் என்று இத்தாலி உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை இத்தாலி பேணவேண்டும்.” என்று தெரிவித்தார்.எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு பொதுச் செயலாளரான ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் கூறுகையில், ”இத்தாலியின் நடவடிக்கை நம்பிக்கை மோசடி” என்று தெரிவித்தார். இப்பேரணியில் நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இத்தாலி கடற்படையினரை திரும்ப அனுப்பக்கோரி இத்தாலி தூதருக்கு எஸ்.டி.பி.ஐ மனு ஒன்றை அளித்தது.
0 comments:
Post a Comment