21 Mar 2013
டாக்கா:வங்காளதேச அதிபர் முஹம்மது ஸில்லூர் ரஹ்மான் மரணமடைந்தார். அவருக்கு வயது 85. வங்காளதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜீபுர்ரஹ்மானின் சக தோழரான ஸில்லூர் ரஹ்மான் நுரையீரல்-சிறுநீரக கோளாறால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிட்சைப்பெற்று வந்தார். சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் அவர் மரணித்ததாக அதிபரின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இம்மாதம் பத்தாம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் ஸில்லூர் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு அவாமி லீக் ஆட்சியை பிடித்த பிறகு 2009-ஆம் ஆண்டு அவர் அதிபராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞரான ஸில்லூர் ரஹ்மான், முஜீபுர்ரஹ்மான் 1975-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு அவாமி லீக்கை ஒற்றுமையுடன் வழிநடத்தியவர்.
0 comments:
Post a Comment