19 Mar 2013
காட்மாண்டு:இந்தியாவை விட வறுமையை ஒழிப்பதில் அதன் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகியவை சிறப்பாகச் செயல்படுதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேவேளையில் இந்தியாவில் 1999-2006-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மக்களிடம் உள்ள வறுமையை ஒழிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு 1.2 சதவிகிதமாக இருந்த நிலையில், இதில் நேபாளம் 4.1 சதவிகித வளர்ச்சியும் வங்கதேசம் 3.2 சதவிகித வளர்ச்சியும் கண்டுள்ளன. அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க கூடிய சத்தான உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய 3 அடிப்படை அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
வறுமையைக் குறைப்பதில் நேபாளம், வங்கதேசம், ருவாண்டா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வறுமை ஒழிப்பின் வேகம் மிகவும் குறைவான அளவே இருப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
0 comments:
Post a Comment