Wednesday, March 13, 2013

பாளையங்கோட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட்[NWF] நடத்திய கையெழுத்து இயக்கம்

                       



     பெண்களின் பாதுகாப்பு! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாளை பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மார்ச் -8 உலக மகளிர் தினத்தையொட்டி நேஷனல் விமன்ஸ் ஃபிரண்டின் கையெழுத்து இயக்கம், நெல்லை மாவட்ட செயலாளர் நுஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. இக்கையெழுத்து இயக்கத்தை SDPI கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தொடங்கி வைத்தார்.மேலும் சிறப்பு விருந்தினராக சமுக ஆர்வலர் பேராசிரியர் சாந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
பாளை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக்கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பல தரப்பு பெண்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.


சமுக ஆர்வலர் பேராசிரியர் சாந்தி அவர்கள் தொடங்கி வைத்த பொழுது



0 comments:

Post a Comment