மார்ச் 23:இலங்கையில் நடந்த இனப்படுகொலை விடயமாக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர். அதில் கலந்து கொண்ட BJP தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என எதிர்த்தது.
பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம்; அப்படியே மீறி பாராளுமன்றத்தில் அத்தகைய தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை எங்கள் கட்சி ஆதரிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (BJPயின்) சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாக எதிர்த்தார்.
தமிழ் நாட்டில் ஒட்டு பொறுக்க, ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பது போல் அறிக்கைகளை அள்ளி வீசி கொண்டு மறுபுறம் பெரிய ஆப்பாக அடித்திருக்கிறது ஹிந்துத்துவா வர்ணாசிரம மதவாத கட்சி. இந்தியா ஒரு நாளும் அப்படிப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர உதவப்போவது இல்லை. ஒரு கண்துடைப்புக்குதான் இதை இந்தியா செய்கிறது. அந்த கண்துடைப்பு நாடகத்தை நடத்த கூட நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாரதிய ஜனதா கொக்கரிக்கிறது.
இதில் இருந்து ஒன்று நல்லா விளங்குது தமிழர்களுக்காக இந்தியாவில் குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லை. இதே விஷயம் வேறு மாநிலத்தவர்களுக்கு நடந்திருந்தால் அன்றே இந்தியா துண்டாகி போகி இருக்கும். ஒரு விஞ்சான யுகத்தில் கண்ணெதிரே பல இலட்சம் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது மட்டுமல்லாது அதை போர் குற்றம் என்று சொல்வதை, அந்நிய நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் பாரதிய ஜனதாவின் இரட்டை முகத்தையும், நீலி கண்ணீரையும் தமிழர்கள் அறிந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment