Monday, March 18, 2013

துலே கலவரம்:கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கத் தேவையில்லை! – மாவட்ட ஆட்சியர்

                       18 Mar 2013 துலே கலவரம்
 
     புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் போலீஸ் அராஜகமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 6 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். கொல்லப்பட்டவர்கள் கலவரத்தில் பங்கேற்றார்கள் என்று அவர் காரணம் கூறுகிறார்.
 
     ஆனால், மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரித்த முதல்வர் அலுவலகம், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதால் இழப்பீடு வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். ஆனால், போலீஸில் உள்ள வகுப்புவாதிகளுக்கு கலவரத்தில் பங்கிருப்பதாக முதல்வரின் அலுவலகம் கூறுகிறது.
 
     ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட மோதல் போலீஸ் தலையீட்டால் கலவரமாக மாறியது. வன்முறையாளர்களுடன் இணைந்து போலீசும் முஸ்லிம்களை வேட்டையாடியது. இச்சம்பவத்தில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. கலவரத்தில் போலீசின் பங்கினை நிரூபிக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

0 comments:

Post a Comment