18 Mar 2013
பாக்தாத்:2003-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு துவங்கியதிற்கு பிறகு 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,12,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் பாடி கவுண்ட்(ஐ.பி.சி) என்று குழு தயாரித்த அறிக்கை கூறுகிறது.
இந்த எண்ணிக்கை இதுவரை கிடைத்த விபரம் என்றும், முழுமையான ஆவணங்கள் கிடைக்கும் பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 1,74,000 ஆக அதிகரிக்கும் என்றும் லண்டனை மையமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி கூறுகிறது.
வரலாற்றில் இதுவரை இல்லாத கூட்டுப்படுகொலை ஈராக்கில் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு துவங்கிய ஆண்டுகளில் துல்லியமான விபரங்கள் கிடைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஐ.பி.சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாதில்தான் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment