14 Mar 2013
வாடிகன்:உலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புதிய போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோ தேர்வு செய்யப்பட்டார். இவர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர்.
போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் கடந்த மாதம் 28ந்தேதி பதவி விலகினார். இதைத்தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டுரிமை பெற்ற உலகம் எங்கும் உள்ள 115 கர்தினால்கள் வாடிகன் வந்து குவிந்தனர். இந்தியா சார்பில் 5 கர்தினால்கள் வாடிகன் சென்றனர்.
புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நேற்று முன்தினம் மதியம் தொடங்கியது. நேற்று அதிகாலையில் முதல் வாக்கெடுப்பு தொடங்கியது.
இந்திய நேரப்படி நள்ளிரவில் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பதை அறிவிக்கும் வகையில் வெண்புகை வெளியேற்றப்பட்டது.
போப் ஆண்டவராக தேர்வு பெற மொத்தம் 115 ஓட்டில் 3ல் இரண்டு பங்கான 77 ஒட்டுகள் பெற வேண்டும். அதன் படி அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோகிலியோ புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை பாதிரியார்கள் பால்கனிக்கு வந்து அறிவித்தனர்.
0 comments:
Post a Comment