Sunday, March 24, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்ட டெக்கான் க்ரோனிக்கிள், ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டெக்கான் க்ரோனிக்கிளின் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் பதிப்புகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


     அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடத்திச் சென்று பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள மத நிறுவனங்களில் சேர்த்ததாக மேற்கண்ட பத்திரிகைகள் அவதூறான செய்தியை வெளியிட்டன. எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்த செய்தியை வெளியிட்டதன் மூலம் பாப்புலர் ஃப்ரண்டின் இமேஜை தகர்ப்பதற்கான வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் பெங்களூரில் எவ்வித மத நிறுவனங்களையும் நடத்தவில்லை. செய்தியில் கூறப்பட்டுள்ள ஹனஃபி மதரசாவுடன் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜரில் இருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் கடத்திச் சென்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இவ்விசயத்தில் நிபந்தனையின்றி மன்னிப்புக்கோராவிட்டால் பாப்புலர் ஃப்ரண்ட் இவ்விரு பத்திரிகைகளுக்கும் எதிராக நீதிமன்றத்தை அணுகும்.

இப்படிக்கு,

ஒ.எம்.அப்துல் ஸலாம்,

0 comments:

Post a Comment