19 Mar 2013
இஸ்லாமாபாத்:எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி பாகிஸ்தானில் ஒரு நாள் சுற்றுப்பயணம் நடத்தினார். நூர்கான் விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்த முர்ஸிக்கு 21 குண்டுகள் முழங்க பாகிஸ்தான் வரவேற்பு அளித்தது. முர்ஸியுடன் பாக். அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஆகியோர் நிற்கும் காட்சிகளை அந்நாட்டின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
1960-ஆம் ஆண்டிற்கு பிறகு எகிப்திய அதிபர் ஒருவர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தாரியின் வேண்டுகோளை ஏற்று முர்ஸி பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானுடனான நல்லுறவை வளர்ப்பதன் துவக்கமாக முர்ஸியின் சுற்றுப்பயணம் அமையும். இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு இடையேயான பாரம்பரிய மற்றும் நல்லிணக்க உறவுக்கான மைல்கல் என்று முர்ஸியின் சுற்றுப்பயணத்தை எகிப்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சர்தாரியுடன் சந்திப்பு மற்றும் பிரதிகள் அளவிலான சந்திப்பு ஆகியவற்றை முர்ஸி நடத்துவார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களில் முர்ஸி கையெழுத்திடுவார்.
0 comments:
Post a Comment