லிபிய தலைநகர் திரிபோலியில் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை கையளிப்பதற்கும், திரிபோலியில் இருக்கும் வெளிப்பிரதேச கிளர்ச்சிப் படை வீரர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசு இருவார கெடு விதித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 20ம் திகதிக்குள் திரிபோலியில் இருந்து ஆயுதங்களை அகற்ற உதவுமாறு திரிபோலியின் நிர்வாக கவுன்ஸில் கோரியுள்ளது. இதற்காக திரிபோலியில் தொடர்ச்சியான அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
திரிபோலியின் மார்டியர் சதுக்கத்தில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், தேவையற்ற இராணுவம் மற்றும் ஆயுதங்களை திரிபோலியில் இருந்து அகற்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக வரும் இருபதாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்குள் திரிபோலி வாசிகள் தமது ஆயுதங்களை அரசிடம் கையளிக்க வேண்டும் என்பதோடு வெளிப்பிரதேச கிளர்ச்சியாளர்கள் டிரிபோலியை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வாறு நிகழாதபட்சத்தில் திரிபோலி முழுவதும் அடைக்கப்படும் என லிபிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லிபியாவில் முஅம்மர் கடாபிக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒருசில மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் கிளர்ச்சிப்படை வீரர்கள் தலைநகர் திரிபோலி எங்கும் ஆயுதம் ஏந்தி நடமாடுகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து லிபிய இடைக்கால பிரதமர் அப்துல் ரஹிம் அல் கிப், திரிபோலி நிர்வாக கவுன்ஸிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே திரிபோலியில் இருந்து ஆயுதங்களை முற்றாக அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. “உங்களது சேவைக்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தற்போது குடும்பங்களுடன் இணையும் தருணம் வந்துவிட்டது. நீங்கள் ஊர் திரும்பி உங்களது பிரதேசத்தை கட்டியெழுப்புங்கள்” என்று திரிபோலியில் இருக்கும் வெளிப்பிரதேச கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
yarlmuslim
0 comments:
Post a Comment