Thursday, December 29, 2011

எனக்கு ஏதாவது ஆனால்..!


எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால், நீங்கள் தான் என் மகனுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்ட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்தாரி துபாயில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவரும், பாக்., முன்னாள் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான அய்ட்ஜாஜ் அசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியுள்ளார்.

அப்போதுதான் அவரிடம், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்நிலையில், சிந்து மாகாணத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ நினைவிடம் அமைந்துள்ள கர்ஹி குதா பக்ஷ் கிராமத்தில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் இறுதியுரை ஆற்றும்படி, அசனைக் கேட்டுக் கொண்டார் சர்தாரி.

இது பாக்., அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கிலானியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அசனை பிரதமராக நியமிக்க சர்தாரி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால் அதை மறுத்த அசன்,"ஒருவர் பிரதமர் ஆவதற்கு எம்.பி.,யாக இருக்க வேண்டியது அவசியம். எனினும், இடைத் தேர்தல் மூலம் நான் எம்.பி.,யாக வாய்ப்பிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment