சிரியாவில் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இது கலவரமாக மாறியுள்ளது. இதில் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று தலைநகர் டமாஸ்கஸ் அருகே சதுக்கத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே சிரியாவில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சூடான் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஜெனரல் முகமது அகமது முஸ்தபா அல்-தபாய் இக்குழுவுக்கு தலைவராக உள்ளார். அவர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், பாபாஅம்ரோ, இட்லிப் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment