லெபனானில் செயற்படும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. உறுப்பினர்களின் விபரத்தை ஹிஸ்புல்லா அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
லெபனானில் இயங்கும் ஷியா அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பு சி.ஐ.ஏ. செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் லெபனானில் இயங்கும் 10 சி.ஐ.ஏ. உறுப்பினர்களின் பெயர் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல்களை லெபனானின் அல் மனார் தொலைக்காட்சி வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தகவலை சி.ஐ.ஏ.வின் ஊடகப் பேச்சாளர் ஜெனிபர் யன்புலூட் மறுத்துள்ளார். இது போலியான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா என்பது பயங்கரவாத அமைப்பு. அதற்கான பிரசார வேலையில் அல்மனார் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா தனது உளவுச் செயற்பாடுகளை லெபனானில் முன்னெடுக்க முடியாமல் தடுமாறிவருவதாக சி.ஐ. ஏயின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க மற்றும் சியோனிஸ உளவாளிகள் 15 பேர் மீது ஈரானில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகமான இர்னா தெரிவித்துள்ளது.
yarlmuslim
do u know their name. I am trying to find out their names.
ReplyDeleteno unmai virumbi
ReplyDeleteno unmai virumbi
ReplyDelete