அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் புதன்கிழமை வெளியானது.
இது தொடர்பாக சாவேஸ் மேலும் கூறியிருப்பது: இந்த விவகாரம் தொடர்பாக அசட்டையாக எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை. அவர்கள் (அமெரிக்கா) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது. இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றிய கருத்தை நான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளேன்.
ஏற்கெனவே 1946- 48-ம் ஆண்டுகளில் கெüதமலா சிறையில் கைதிகளை வைத்து பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது தொடர்பாக ஆய்வு செய்த நாடுதான் அமெரிக்கா என்றார்.
ஈக்வடார், பொலிவியா நாட்டு அதிபர்கள் மீது இனி கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறேன். அவர்களுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படலாம் என்று சாவேஸ் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
எனக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கியூபா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நோயின்றி இருக்கிறேன் என்றார்.
முன்னதாக புற்றுநோயை வென்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடத்தப் போவதாகவும் சாவேஸூம் பராகுவே அதிபர் லுகோவும் ஏற்கெனவே ஒருமுறை நகைச்சுவையாகத் தெரிவித்திருந்தனர்.

as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment