ஈராக்கில் 9 ஆண்டு இராணுவ தலையீட்டுக்கு பின் அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதையொட்டி சம்பிரதாயபூர்வமாக தேசிய கொடி இறக்கி வைக்கப்பட்டது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவப் படை தலைமையகத்தில், அமெரிக்கப் படை ஈராக்கில் இருந்து விடை பெறும் வைபவம் இடம்பெற்றது. இதில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் சேவை முடிந்ததைக் கணிக்கும் வகையில் அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.
கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் ஹ¤ஸைனின் அரசுக்கு எதிராக ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு யுத்தம் புரிந்தது. இதன்போது சுமார் 170,000 அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தனது இராணுவச் செயற்பாட்டை முன்னெடுத்தது. ஈராக்கில் சுமார் 500 வெளிநாட்டு இராணுவத் தளங்கள் செயற்பட்டன.
இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் சுமார் 4,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு இலட்சம் ஈராக்கியர் பலியாயினர். மேலும் 1.75 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர். ஈராக் யுத்தத்தில் அமெரிக்கப் படை சுமார் ஒரு டிரில்லியன் டொலரளவு செலவு செய்துள்ளது.
yarlmsulim
0 comments:
Post a Comment