Sunday, December 18, 2011

அமெரிக்காவின் நிம்மதியைக் கெடுத்துள்ள ஈரான் (கட்டுரை)


ஏ.ஜி.எம். தெளபீக்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை பிடித்து வைத்துள்ள ஈரான் உச்சக்கட்ட விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் வியத்தகு சாதனையாக பெருமையடிக்கிறது. ஆப்கானிஸ்தானை நோக்கி ஈரானின் வான் எல்லையூடாக பறந்து செல்கையிலேயே இந்த விமானத்தை ஈரான் இறக்கியெடுத்தது. கண்ணுக்கும், அதிநவீன ராடருக்கும் புலப்படாத வானின் உச்சி முகட்டையே தொடும் தூரத்தில் பறந்த இவ்விமானத்தை ஈரான் கண்டுவிட்டதேயென்று வாயைப் பிளக்கின்றனர் பலர். இன்னும் சிலர் இயந்திர கோளாறு காரணமாகவே இந்த ஆளில்லா விமானம் ஈரான் எல்லைக்குள் தரையிறங்கியதாகவும் சொல்கின்றனர். 

நீண்ட நாள் கோபமும் தாபமும் இனி தான் மோதலாகப் போகிறதோ என்று அஞ்சுகின்றனர் இன்னும் சிலர். எங்களது விமானம் ஈரானிடம் உள்ளது. அதைத் தருமாறு கேட்டுள்ளோம் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை விட்டுள்ளார். எனது பொருளைத் தா இல்லாவிட்டால் உனது முதுகில் தருவேன் நல்ல பிரம்படி என்ற பாணியிலே ஒபாமா பேசியுள்ளார். பெரிய நாடல்லவா இதைப்போல எத்தனையோ விமானங்களை வைத்திருக்கும் இந்த வல்ல அமெரிக்கா, இதற்காக கெஞ்சியும் மண்டியிட்டும் ஏன் கேட்கப் போகிறார் ஒபாமா. 

என்னதான் என்றாலும் இவ்வளவு நவீனமான நமது ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் இறக்கிவிட்டதே என்ற திகைப்பும், ஆச்சர்யமும் அமெரிக்கரிடம் இருக்கவே செய்யும். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வொஷிங்டன் சென்றிருந்த ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியிடம் விமானம் இறக்கப்பட்டமை, ஈரானின் முறைகேடான வேலைகள் ஈரானைத் தண்டிக்க வேண்டியதன் நியாயங்களையெல்லாம் ஒபாமா விளக்கியுள்ளார். ஈராக்கில் எஞ்சியுள்ள 6500 அமெரிக்க படைகளும் இந்தாண் டின் இறுதிக்குள் அதாவது இன்னும் இரு பது நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக வாபஸ் பெறப்படவுள்ளன. ஈராக்கிலுள்ள நான்கு அமெரிக்க தளங்களில் இப்படை கள் நிலைகொண்டுள்ளன. பஸ்ரா, நஸ்ரியா என்பவை இதில் பிரதானமான வையாகவுள்ளன.

என்னடா இந்த நேரம் பார்த்து ஈரான்காரன் விமானத்தையும் பலாத்காரமாக இறக்கி எடுத்துட்டான் நிலைமைகள் எப்படி மாறுமோ என்றெண்ணுகின்றது ஈராக். மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளையும் மேவி ஈரான் வளர்ந்து வல்லரசாகக் கூடாது என்பதில் அரபு நாடுகளை விட ஈராக் ஒரு காலத்தில் உஷாரா உழைத்த நாடுதான். முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹஸைனுடைய காலங்களில்தான் ஈரான், ஈராக் முரண்பாடுகள், மோதல்கள் தலைவிரித்தாடின. இத்தனைக்கும் இரண்டும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேசங்கள்.

ஆனால் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹஸைன் சுன்னி முஸ்லிமாக இருந்தார். ஈராக்கின் பெரும்பான்மை சமூகமான iயா முஸ்லிம்களை அதிகாரத்தின் இரும்புக்கரம் கொண்டு நசுக்கினார்; அடக்கினார். இதனால் ஈராக், ஈரான் மோதல்கள் மோசமடைந்து கூர்மையாகின. இன்று நிலைமைகள் இவ்வாறில்லை. ஈராக்கிலுள்ள ஷியா பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரம் அரச நிர்வாகங்களை கையில் எடுத்துள்ளனர். அந்நாட்டின் அதிகாரம் பொருந்திய பிரதமர் பதவியிலுள்ளவரும் ஷியா முஸ்லிமே! எனவே ஈரான், ஈராக் உறவுகளையும் உணர்வுகளையும் முன்னர் போல நோக்கவும் கருதவும் இயலாது. 

இதனால்தான் இன்று அமெரிக்கா ஆழமாகவும் அகலமாகவும் யோசனை செய்கின்றது. ஈராக்கில் எஞ்சியுள்ள படைகளையும் விலக்கிக் கொண்டால் ஈரானின் பிடியும் இருப்பும் வளைகுடாவில் பெருகும், பலமடையும் இந்நிலைமைகள் லெபனான், சிரியா போன்ற நாடுகளைப் பலப்படுத்தும் குவைத், சவூதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகளை பலவீனப்படுத்தலாம் இதனால் இஸ்ரேல் அச்சமடையவும் வாய்ப்புண்டு என்பதற்காகவே வளைகுடாவில் கட்டார், குவைத், பஹ்ரைன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் இணக்கத்துடன் புதிய இராணுவத் தள மொன்றை நிறுவவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவாம். இப்போது அமெரிக்காவின் விமானத்தையே வானத்திலிருந்து இறக்கியெடுத்த ஈரான் நாளைக்கு என்னென்ன செய்யுமோ யாரு கண்டார். 

இதனால்தான் கடுமையான பாணியில் ஹிலாரி கிளிண்டனும் பேசியிருக்கா. எங்களது விமானத்தை தரும்படி முறைப்படி கேட்டுவிட்டோம் எங்கள் எதிரி (ஈரான்) இதைத் தரும் என நான் நினைக்கவில்லை. ஈரானின் நன்னடத்தைக்கு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாகவும் ஹிலாரி அம்மா சொல்றா. பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் வில்லியம் ஹேக்குடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலே ஹிலாரியின் இக் கருத்துக்கள் வெளியாகின. இன்னும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனிட்டா இது தொடர்பாக அவசரத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தியிட்டார் பாருங்கோ. டிசம்பர் 4 இல் ஈரான் எமது (அமெரிக்கா) உளவு விமானத்தை இறக்கி வைத்துள்ளது. இந்த விமானத்தின் அதிநவீன தொழில்நுட்ப பொறிமுறைகளை ஈரான் கற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஈரானிடமுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பொறிமுறை வளர்ச்சிகளைக் கொண்டு இதுபோன்ற விமானங்களையும் ஈரான் தயாரிக்கத் துணிந்துவிடும் என்பதே லியோன் பெனிட்டாவின் பதற்றம் என்பதை எல்லோரும் புரிந்துவிட்டனர். 

என்ன செய்வம் இப்போ காற்று ஈரான் பக்கம்தான் வீசுகிறது போலும். ராடர்களையே ஊடறுத்துப் பறக்கும் இந்த விமானங்கள் எல்லாம் அமெரிக்காவின் சி. ஐ. ஏ. உளவு நிறுவனத்தின் முக்கிய புள்ளிகளே பாவிப்பார்களாம். இப்படிப்பட்ட விமானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் எல்லோரும் அமெரிக்க அரசின் விசேட கவனிப்பிலும் கண்காணிப்பிலும் செயற்படுவதுண்டு. விமான உதிரிப்பாகங்கள் பொறிமுறை இரகசியங்கள் எவையும் வெளி இடங்கள் வேற்று நாட்டவர் நபர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதில் சி. ஐ. ஏ. கடும் கவனமாய்ச் செயற்படுகிறது. 

இவ்வாறான ஆளில்லா நவீன உளவு விமானங்கள் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளானாலும் ரீமோட் கொன்றோலின் உதவியுடன் கறுப்புப் பெட்டியிலுள்ள தகவல்களை தொழில் நுட்பவியலாளர்கள் பெறுவார்களாம். எனினும் இவ்விமானம் எவ்வாறு ஈரானில் தரையிறக்கப்பட்டது என்ற கேள்வியை சி. ஐ. ஏ. கேட்டுக் கேட்டே நிம்மதியை இழந்துவிட்டது போங்கோ. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவிகளின்றி ஈரான் தனித்து நின்று இவ்விமானத்தை சிகியிருந்தால் இது மிகப்பெரிய தலையிடியாகவும் ஆபத்தாகவும் அமையும் என்று எச்சரித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவி ஜனாதிபதி டிக் சென்னி அவசரமான இராணுவ தாக்குதல் மூலம் ஈரான் பிடித்து வைத்துள்ள இந்த விமானத்தை தாக்கியழிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அத்துடன் ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் காரசாரமாக விமர்சித்துள்ளார். 

ஒபாமா இன்று அவசரமாக செய்ய வேண்டிய வேலையும் இதுதானாம். என்ன தெரியுமோ உடனடியாக ஈரானிலுள்ள இந்த விமானத்தை தாக்கி அழிப்பது தானாம். பாருங்கோ தன்னுடைய மூளையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் இன்னொருவனுக்குப் போகக் கூடாது என்பதில் அமெரிக்கா எப்படி உஷாரா இருக்கு. இந்த அறிவையும் தொழில்நுட்பத்தையும் வைத்துக் கொண்டுதானே எல்லா நாடுகளையும் மண்டியிடவும் சரணடையவும் செய்யுது இந்த அமெரிக்கா. இப்ப நாய்க்கொரு காலமெண்டா பூனைக்கும் ஒரு காலம் என்ற கதையும் š¡பகத்துல வருகிறது. கடுமையான பொருளாதார தடைகளால் விமான உதிரிப் பாகங்களை கூட பெற முடியாது ஈரான் தவித்த காலமும் இருந்திச்சி கண்டயலோ எங்கே இருந்து பார்ப்போம் அமெரிக்க விமானங்கள் ஈரானைப் பதம் பார்க்குமா அல்லது ஈரானும் தனது பலத்தைக் காட்டுமா. எல்லோரும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம். யார் எதைச் சொன்னாலும் இறைவனுடைய விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும்.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment