Saturday, December 17, 2011

முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு


லண்டன் : உலகப் புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றான கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் முஸ்லீம்களுடன் கை குலுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது கல்வியாளர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கை குலுக்கும் போது பதில் கை குலுக்கல் சரியில்லாமல் போனால் சில மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதாலேயே முஸ்லீம்களிடம் கை குலுக்காமல் அதை உடல் மொழியாலே வெளிப்படுத்த உத்தரவிட்டதாக விளக்கியுள்ளது. ஆனால் இவ்வுத்தரவை கேம்பிரிட்ஜ் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல தாங்கள் என்றும் எந்த மன நிலையில் யாருக்கு கை குலுக்க வேண்டும், யாருக்கு கை குலுக்க வேண்டாம் என்பதை முடிவு செய்யும் திறன் தமக்கு இருப்பதாகவும் இச்சாதாரண விஷயத்தை அதிகாரபூர்வ சுற்றறிக்கையை வெளியிடுவது ஒருவரை பேட்டி காண்பதையே சங்கடத்துக்குள்ளாகி பிரச்னையை பூதகாரமாக்கி உள்ளது என்று கண்டித்துள்ளனர்.
ismailpno

0 comments:

Post a Comment