துனிசியாவில் ஏற்பட்ட புரட்சி காரணமாக அதிபர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய அரசு சனிக்கிழமை பதவியேற்றது.
கடந்த 24 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த சைனி எல் அபிதின் பென் அலிக்கு எதிராக இந்த ஆண்டு தொடக்கத்தில் புரட்சி வெடித்தது. இவரது ஆட்சியில் லஞ்சம் அதிகரித்ததாகவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அலி பதவி விலகினார்.
இந்நிலையில், என்னா என்ற இஸ்லாமிய கட்சி தலைமையிலான புதிய அரசு சனிக்கிழமை பதவியேற்றது. எனினும், இது தற்காலிக அரசாகவே இருக்கும். புதிய சட்டம் இயற்றப்பட்டு அதன்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவை அடுத்து, எகிப்து, லிபியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்தது குறிப்பிடத் தக்கது.
as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment