Saturday, December 31, 2011

ஆளில்லா ஹெலிகாப்டரை அமெரிக்கா தயாரித்தது


அமெரிக்கா ‘டிரோன்’ என்றழைக்கப்படும் ஆளில்லா தானியங்கி விமானங்களை தயாரித்துள்ளது. அந்த விமானங்கள் மூலம் மறைவிடங்களில் பதுங்கி ஏவுகணை வீசி அழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் உயிரிழந்தனர்.  அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற்றப்பட்டது.   

அதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கா ஆளில்லாமல் பறக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களையும் தயாரித்துள்ளது. அதில் சக்தி வாய்ந்த கலர் வீடியோ காமிராக்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை இயக்க ஒருதளம் தேவையில்லை. இதன் சோதனை ஓட்டம் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. 

அமெரிக்கா 3 ஆளில்லா ஹெலிகாப்டர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இயக்கவுள்ளது.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment