மார்ச் 02/2013: மக்களை போதையில் ஆழ்த்தி, அவர்களின் உடல் நலத்தை கெடுத்து, எதிர்காலத்தை சிதைத்து, பல லட்சம் குடும்பங்களின் வயிற்றெரிச்சலில் கிடைக்கும் பணத்தை கொண்டு இலவசங்களை அள்ளிவீசி ஓட்டு பொருக்கும் திமுக, அதிமுக. போன்ற மாநில கட்சிகளையும், காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற மத்திய கட்சிகளையும் மக்கள் புறம் தள்ள வேண்டும்.
மக்களை நல்லாட்சி செய்யத்தான் ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்களோ தேர்தல் முடிந்ததும் மக்களின் ரத்தங்களை அட்டை பூச்சிகள் போல உருஞ்சுகிரார்கள்/ தேர்தல்களில் வாக்குறுதி அளித்த இலவசங்களை அள்ளி வீச, ஏழை மக்களின் குடும்பத்தை சிதைத்து, மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள்.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். அதுவெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. மதுவிலக்கை அமுல்படுத்த கோரி கடந்த 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் தியாகி சசிபெருமாளின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இருந்தும் ஆட்சியாளர்களின் மனது கல்லாகவே இருக்கிறது.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் SDPI கட்சி மற்றும் பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆகியவை தொடர் போராட்டங்களை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மகஇக, தமிழக இளைஞ்சர் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி, கம்னிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக போன்ற கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. வைகோ நான்கு கட்ட நடைபயணத்தை அறிவித்து முதல் கட்டமாக நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 400 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அம்ஆத்மி கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர். மக்கள் மதுஒழிப்பு சங்கம் சார்பாக நாளை (03.03.2013) மெரீனா கடற்கரையில் மனித சங்கலி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது இருந்தாலும் தமிழ் நாட்டில் செத்த பாம்பாக இருக்கும் காங்கிரசுக்கு உயிர் கொடுக்க அவர்களும் மது ஒழிப்பு போராட்டத்தில் குதிக்க இருக்கிறார்கள். இத்தனை நடந்தும் ஜெயா அம்மா மீலாத உறக்கத்தில் இருக்கிறார். அம்மா விழிப்பாரா? பூரண மதுவிலக்கை கொண்டு வருவாரா? thanks, sinthikkavum

0 comments:
Post a Comment