9 Mar 2013
திருவள்ளூர்:திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் முஹம்மத் சாஜித் (25). வாகன ஓட்டுனர் உரிமத்துக்காக திருவள்ளூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். நேற்றைய தினம் லேனர் பெறுவதற்காக, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கச்சென்ற அவரை, தொப்பியை கழட்டும்படி அங்கிருந்த அலுவலர் கூறினார். தான் எப்போதும் தொப்பி அணியும் பழக்கமுடையவர் என்றும், வாக்காளர் அடையாள அட்டை – வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் தொப்பி அணிந்த நிலையில் தான் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார் முஹம்மத் சாஜித்.
ஆனால் புகைப்படம் எடுக்கும் அலுவலர், எதையும் ஏற்றுக்கொள்ளாததால் அங்கிருந்த வாகன உரிமம் வழங்கும் ஆய்வாளரை அணுகினார் சாஜித். அவரும், யாராக இருந்தாலும் தொப்பியை கழற்றி விட்டுத்தான் போட்டோ எடுக்கவேண்டும், என்று நீண்ட லெக்சர் அடித்தாரே தவிர, சாஜிதுக்கு உதவ முன்வரவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லவேண்டும் என்ற நிலையிருந்ததால், அவரால் அதிகநேரம் போராட முடியாததால், விரக்தியுடன் வீடு திரும்பிவிட்டார். மீண்டும் திங்கள் கிழமை அன்று ஆர்.டி.ஓ அலுவலகம் வரவுள்ள சாஜித்துக்கு, அவரது மத சுதந்திரத்துக்கு பாதகமில்லாமல், தொப்பி அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்களா? . வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் தொப்பியுடன் இருந்தும் அவர்கள் போட்டோ எடுக்க அனுமதி மறுப்பது அவர்களின் முஸ்லிம் விரோத போக்கினை காட்டுகிறது.
0 comments:
Post a Comment