Wednesday, June 5, 2013

இஷ்ரத் கொலை வழக்கு: ஐ.பி அதிகாரியிடம் சி.பி.ஐ விசாரணை!

4 Jun 2013
 
     புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத்தின் மோடி போலீசாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரி(ஐ.பி)யிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.
 
     இஷ்ரத் ஜஹான் உள்ளிட நான்கு பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு 1979ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியிடம் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி ஆஜரான அவரிடம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு சதித் திட்டம் தீட்டி இருப்பதாக குஜராத் குற்றப் பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தீர்களா? எனகேட்கப்பட்டது. அப்போது அவர், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு மோடியை கொலைச்செய்ய லஷ்கர்-இ-தய்யிபா அமைப்பு திட்டமிட்டது தொடர்பாக குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் கொடுத்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
 
     போலி என்கவுண்டர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,’தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் தருவது எனது கடமை. இதன் அடிப்படையில் குஜராத் போலீஸ் நடத்திய போலி என்கவுண்டருக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று கூறியுள்ளார். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட வேளையில் குஜராத் மாநிலத்துக்காக தகவல் அளிக்கும் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment