7 Jun 2013 

வாஷிங்டன்:ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதி எண்ணிக்கையினரும் மரணமடைவதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைக்காததால் உலகில் ஆண்டுதோறும் 31 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. பிறந்த முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு கிடைப்பது கட்டாயம். வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது இக்காலக் கட்டத்தில் கிடைக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார பின்னடைவால் பல குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைக்காமல் போகின்றன. உலக அளவில் 16.5 கோடி குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற உயரம் இல்லை. உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 5 கோடியாகும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், இரண்டு வயது வரை குழந்தைக்கும் ஊட்டச் சத்துமிக்க உணவுகள் கிடைத்தால் கடுமையான நோய்கள் ஏற்படாது என்று இது தொடர்பான ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்காவில் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்தின் பேராசிரியர் ராபர்ட் ப்ளாக் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியின் முழு விபரமும் லான்ஸேட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment