7 Jun 2013
வாஷிங்டன்:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிச் செய்ததற்காக இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதிச்செய்வது குறைந்தது கண்டறிந்ததை தொடர்ந்து தடையை வாபஸ் பெறுவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, மலேசியா, கொரியா குடியரசு, இலங்கை, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, துருக்கி, தைவான் ஆகிய நாடுகள் மீதான தடை வாபஸ்பெறப்படுவதாக கெர்ரி அறிவித்துள்ளார்.
ஆறுமாதங்களுக்கு முன்பு அமெரிக்கா இந்நாடுகள் மீது தடை விதித்தது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் இடையேயான கருத்தொற்றுமையே தெஹ்ரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிச் செய்வது கணிசமாக குறைவதற்கு காரணம் என்று கெர்ரி கூறுகிறார். ஈரானில் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்து வந்த இந்தியா, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடி பணிந்து கணிசமாக இறக்குமதியை குறைத்ததாக செய்திகள் வெளியாகின.
0 comments:
Post a Comment