Saturday, March 9, 2013

Kanchipuram ???

காஞ்சீபுரத்தில் பள்ளிவாசல் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்! ...Mar 04, காஞ்சீபுரத்தை அடுத்த "நசரத் பேட்டை"யில் (காஞ்சீபுரம் -செங்கல்பட்டு மெயின் ரோட்டில்) 400 ஆண்டுகால பழமைவாய்ந்த "ஷேக் முகம்மதலி ஜும்-ஆ பள்ளிவாசல்" உள்ளது. இந்த பள்ளிவாசல் 1958ல், வக்ப் வாரியத்தில் (Gazette No 85) பதிவு செய்யப்பட்டு, பல்வேறு முத்தவல்லிகளிகளின் கண்காணிப்பில் செயல்பட்டு வந்தது. சாலையின் முக்கிய இடத்தில், பள்ளிக்கு சொந்தமான 2.81 ஏக்கர் (சர்வே எண்30/ பட்டா எண் 41) சொத்தில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களை முறையற்ற விதத்தில் குத்தகைக்கு விட்டு, நிலமோசடி செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் முத்தவல்லியாக செயல்பட்டுவந்த N.K.ஹயாத் பாஷா என்பவர் நீக்கப்பட்டு, கடந்த 2007ம் ஆண்டு முதல் வக்ப் வாரியத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டுவரும் பள்ளிவாசல் நிலத்தை, மேலும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற கும்பலுடன் கைகோர்த்து செயல்படுகிறார்,முன்னாள் முத்தவல்லி N.K.ஹயாத்பாஷா. முஸ்லிம்கள் இறந்துவிட்டால், ஜனாசாவைக்கூட நல்லடக்கம் செய்யமுடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். எனவே, பள்ளியையும், தற்போது காலியாக உள்ள இடத்தையும், உடனடியாக மீட்கும்பொருட்டு "சுற்றுச்சுவர்" அமைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்யவேண்டிய அவசிய அவசரத்தேவை உள்ளதால், அதற்கான வேலைகளை "வக்ப் அனுமதியுடன்" செய்யப்பட்டுவருகிறது. வக்ப் வாரியமும், தனது பங்குக்கு 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்களித்து (வக்ப் விதிகளுக்கு ஏற்ப 70% முன்பனமான ரூ 1,40.000 க்கான காசோலையை) வழங்கிவிட்டது. அடுத்த கட்டமாக இறுதி பங்களிப்பாக ரூ.60,000 வக்ப் வாரியத்தின் மூலம் வந்துவிடும் என்ற நிலையிருந்தாலும், ரூ.7.5 லட்சம் பற்றாக்குறை உள்ளது. தற்போது, நடந்துவரும் பணிகளை தடுக்க, பள்ளியின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள ஹிந்துக்களுக்கு ஆதரவாக "ஆர்.எஸ்.எஸ்.ன் ராஜேந்திர பிரசாத்" உள்ளிட்டவர்கள் களத்தில் இறங்கிவருகின்றனர். களத்தில் இறங்க தயாராகிவரும் கூட்டத்தை சமாளிக்க எதுவாக,"டி.எஸ்.பி" உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கு, வக்ப் வாரியத்தின் சார்பாகவும் - ஜமாஅத் கமிட்டி சார்பாகவும் புகார் மனுக்களும், பாதுகாப்பு கேட்டும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் காஞ்சீபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் முடங்கி போயிருந்த முஸ்லிம்கள், இன்று (04/03) காலை, வேலை துவங்கியநிலையில், பலரும் வந்து முஸ்லிம்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளனர். இதுகுறித்து பள்ளியின் நிர்வாகிகள் நம்மிடம் பேசும்போது, எங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும், சமுதாய ரீதியான ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தாலும், தற்போது, வேலைகளை துரிதமாக முடிக்கும் வகையில் "நிதியுதவி" தேவை என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். அனுபவமும் நமக்கு அதையே உணர்த்துவதாக உள்ளது.See More

0 comments:

Post a Comment