6 Mar 2013
ஸ்ரீநகர்:வடக்கு கஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தங்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து ராணுவம் அட்டூழியம் நடத்தியதை தொடர்ந்து
போராட்டம் நடத்திய மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது ராணுவம்.
போராட்டம் நடத்திய மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது ராணுவம்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கிய பொழுது அவர்களை கலைப்பதற்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற தாஹிர் லத்தீஃப் ஸோஃபி(வயது 25) என்பவர் பின்னர் மரணமடைந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இன்னொரு நபரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
மோதல் சூழல் நிலவும் பகுதிகளில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைக் குறித்து விபரங்கள் சேகரித்து வருவதாக ராணுவச் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
பாரமுல்லா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் உமர் அப்துல்லாஹ் சட்டப்பேரவையில் தெரிவித்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் என்று துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
உணர்ச்சவசப்பட்ட நிலையில் முதல்வர் உமர் அப்துல்லாஹ் சட்டப்பேரவையில் பேசினார். ஆளுநரின் உரையை நிறுத்தி விட்டு இச்சம்பவம் குறித்து உமர் அப்துல்லாஹ் பேசினார். உரை நிகழ்த்துகையில் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் அவர்.
அதேவேளையில், ஹைதராபாத் ஹாஸ்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கஷ்மீர் இளைஞர் கம்ரானின் உடல் கைப்பற்றப்பட்டதை கண்டித்து மஜ்லிஸே முஷாவரா அழைப்பு விடுத்த முழு அடைப்பால் கஷ்மீரில் முழு ஆதரவு காணப்பட்டது. மரணித்த மாணவர் கம்ரானின் வீட்டை நோக்கி பேரணிக்கும் முஷாவரா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் கம்ரானின் சொந்த ஊரான தெற்கு கஷ்மீரின் புல்வாமா நகரில் பெருமளவிலான போலீசும், துணை ராணுவப் படையும் குவிக்கப்பட்டிருந்தனர்.
முழு அடைப்பில் கடைகள், வங்கிகள் பூட்டிக்கிடந்தன. வாகனங்கள் ஓடவில்லை.பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.மாணவரை கொலைச் செய்ததாக முஷாவரா குற்றம் சாட்டுகிறது.
அதேவேளையில் கஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல், இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் கஷ்மீர் மாணவர் கம்ரானின் கொலையைத் தொடர்ந்து நடக்கும் போராட்டம் நடந்துவரும் சூழலில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று காலை முதல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. போராட்டத்திற்கு மக்களை திரட்ட மொபைல், இணையதள சேவைகள் உதவும் என்று அதிகாரிகள் அஞ்சுவதே இதற்கு காரணம்
0 comments:
Post a Comment