Tuesday, December 20, 2011

முஸ்லிம் போராளிகள் என சந்தேகிப்போரை தேடிப்பிடித்து கொல்வோம் - நேட்டோ




போராளிகள் என சந்தேகப்படுபவர்களை தேடி கொலை செய்யும் பணிகளை நேட்டோ தொடர்ந்து செய்யும் என்று தெரிவித்துள்ளது. ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் இந்த செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் நேட்டோ இவ்வாறு தெரிவித்துள்ளது.

நேட்டோவின் செய்தி தொடர்பாளர் பிரிக் ஜென் ஜெகப்சன் தற்போது இரவு நேரங்களில் செய்யப்படும் தேடுதல் வேட்டைகளில் ஆஃப்கனின் சிறப்புப் படை அதிக அளவில் பங்கெடுப்பதாக கூறினார். மேலும் ஆஃப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் ஆதிக்கம் செலுத்துவதால் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்றும் கைது நடவடிக்கைகளை அமெரிக்கா செய்வதா அல்லது ஆஃப்கன் செய்வதா என்பதில் பிரச்னை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஆஃப்கன் அதிபர் கர்சாய் வெளிநாட்டு துருப்புக்கள் ஆஃப்கன் குடிமக்களின் வீட்டினுள் நுழைந்து அடாவடி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் ஆயுதம் ஏந்திய அமெரிக்க துருப்புக்கள் நுழைவதால் ஆஃப்கன் மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க படைகள் நடு இரவில் வருவார்களோ என்று அச்சத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் ஜெகப்சன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூறியுள்ளதாவது; “தேடுதல் வேட்டையை பாதுகாப்பான நடவடிக்கை என்று குறிபிட்டுள்ளார். மேலும் தேடுதல் வேட்டைகளில் 1  சதவீதத்திற்கு குறைவான பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் 85  சதவீதம் நடவடிக்கைகளில் துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஆஃப்கன் அதிபர் கர்சாய் பழங்குடி இன கூட்டத்தை கூட்டினார். அதில் வெளிநாட்டு படைகள் இரவு நேர தேடுதல் வேட்டைகளை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது மேலும் இதுபோன்ற தேடுதல் வேட்டைகள் ஆஃப்கன் படைகளால் வழி நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. மேலும் அதிபர் கர்சாய் அமெரிக்க படைகள் ஆஃப்கன் குடிமக்களின் வீட்டினுள் நுழைவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க சிறப்பு நடவடிக்கை பிரிவு தலைவர் அடம் வில்லியம்ஸ் ரேவன் கடந்த வாரம் கூறியதாவது; கடந்த ஒரு வருடத்தில் 2800 தேடுதல் வேட்டைகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் சில ஆய்வாளர்கள் ஆஃப்கனில் முன்பிருந்த கொரில்லா தலைவர்கள் கொல்லப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக இளைஞர்கள் கொரில்லா படைகளுக்கு பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் முன்பு இருந்ததைவிட ஆக்ரோஷமாக தாக்குதலில் ஈடுபடுவர் என்றும் அரசுடன் அவர்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆஃப்கனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தந்தைத் தொடர்ந்து அமெரிக்க படை ஆஃப்கனை விட்டு வெளியேறுவதாக சொல்லியிருந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு சில ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் ஆஃப்கன் படைகளுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment