Thursday, December 29, 2011

ஸலபி சித்தாந்தத்தை வருங்காலத்திலும் பின்பற்றுவோம் - சவூதி அறிவிப்பு


சவூதி அரேபியா தான் பல்லாண்டுகளாக கடைப்பிடித்து வரும் ஸலபிச சித்தாந்தத்தையே வருங்காலங்களிலும் பின்பற்றும் என்றும் மிதமான சிந்தனையான ஸலபிசத்தை தீவிரவாதத்துடனும் தீவிரத்தன்மையுடயதாகவும் சித்தரிக்கும் போக்கை கண்டிப்பதாகவும் ஆய்வரங்கம் ஒன்றில் பேசிய சவூதி இளவரசர் நயீப் திட்டவட்டமாக கூறினார்.

"ஸலபிசம் - ஷரியாவின் அணுகுமுறையும் தேசத்தின் தேவையும்" எனும் தலைப்பில் இமாம் முஹம்மது பின் சவூத் பல்கலைகழகம் ஏற்பாடு செய்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்ட சவூதி இளவ்ரசர் நயீப் ஸலபிசம் என்பது குரான் மற்றும் நபிகள் முஹம்மதின் வழிமுறையில் உள்ளதாகவும் இதற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக நாம் அணி திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். 

மேலும் ஸலபிசம் பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய உரிமைகள் விஷயத்தில் தாராள போக்கு கொண்டதாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட இளவரசர் இந்த ஆய்வரங்கத்தில் ஸலபிச வரலாறு, ஸலபிசம் குறித்த தவறான கருத்துகளை களைதல், ஸலபிசம் மற்றும் சவூதி அரசாங்கத்திற்கிடையான உறவு மற்றும் ஸலபிசமும் பாடத்திட்டமும் எனும் தலைப்புகளில் ஆய்வுகள் நடத்தவுள்ளது வரவேற்கத்தகுந்தது என்றும் இதன் முடிவுகள் மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். 

ஸலபிய சித்தாந்தத்தை பின்பற்றுவதால் சவூதி அரசாங்கம் இதர சித்தாந்த பிரிவினருடன் கடுமையான போக்கை கடைப்பிடிப்பதாகவும் மாற்று மதத்தினருடான கடும் போக்கை வெறுப்பை தூண்டுவதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment