Thursday, December 15, 2011

இந்தியாவில் சீனா ஊடுருவது உண்மைதான். ஆனால் தாக்குதல் நடத்தாது. மன்மோகன் சிங்



இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதை மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், இருநாடுகளுக்கு இடையிலான உறவு சுமுக நிலையில் உள்ளதாக விளக்கம் அளித்தார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங், 'இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா ஆயத்தமாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தாக்குதலை நடத்துவதற்கான இடங்களை சீனா முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே, இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்துவது நிச்சயம்," என்றார். 


அதற்கு விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இந்தியாவுக்கு சொந்தமான சில எல்லைப் பகுதியில் சீனா ஊடுருவியது உண்மைதான். இதில் சீனாவிடம் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
 

இதுதொடர்பாக இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைக்கு தீர்வு காண்பது என்ற கொள்கையை இந்தியா தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஆகவே, சீனாவுடனான உறவு நல்ல நிலையில் உள்ளது.
 

இந்த விவகாரத்தில், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடை பிடித்த கொள்கையையே இந்த அரசு பின்பற்றுகிறது. எல்லைப் பிரச்னை குறித்து இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 


கடந்த 2005-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு பிறகு குறிப்பிடும் படியான முன்னேற்றம் இல்லை.
 

இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தும் என்ற கருத்தை ஏற்க இயலாது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு தொடர்ந்து நீடித்து வருகிறது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment