ஒட்டாவோ:கனடா நாட்டில் குடியுரிமையை பெற விரும்பும் முஸ்லிம் பெண்கள் குடியுரிமை வழங்கப்படும் நிகழ்ச்சியில் முகத்தை மறைக்கும் நிகாபை அணிய கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.குடியுரிமை துறை அமைச்சர் ஜாஸன் கென்னடி அரசின் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.இன்று முதல் குடியுரிமைக்கான உறுதிமொழி எடுக்கும் வேளையில் முகம் வெளியே தெரியும் வகையிலேயே முஸ்லிம் பெண்கள் ஆடையை அணியவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முகத்தை மறைப்பதால் உறுதிமொழி எடுப்பவர் என்ன சொல்கிறார் என்பது புரிய முடியவில்லை என புகார் எழுந்ததையொட்டி இந்நடவடிக்கை என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் நிகாப், புர்கா ஆகியவற்றை பொதுவாக தடைச்செய்ய அரசுக்கு திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
கனடாவின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.8 சதவீதம் ஆகும்.
thanks to ismailpno
0 comments:
Post a Comment