Wednesday, April 24, 2013

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம்!

                   24 Apr 2013 ajmeer
 
     புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைதுச் செய்யப்பட்ட குஜராத்தைச் சார்ந்த பவேஷ் பட்டேல் ஜெய்ப்பூரில் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக குண்டுவைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
 
     மாஜிஸ்ட்ரேட் முன்பாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று என்.ஐ.ஏ(தேசிய புலனாய்வு ஏஜன்சி) தெரிவித்துள்ளது.கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பின்னர் பெப்ருவரி 27-ஆம் தேதி முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜிதின் மீது குண்டுவீசிய வழக்கிலும் பவேஷ் பட்டேல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.
 
     பவேஷ் பட்டேல் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக அளித்த வாக்குமூலத்தின் முக்கிய பகுதிகள்: குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு வாரம் முன்பாக நான் அஜ்மீருக்கு வரவேண்டும் என்று குண்டுவெடிப்பில் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள சுரேஷ் நாயர் என்னிடம் கட்டளையிட்டார். நான் சம்மதித்தபோது இருவரும் ஒன்றாக செல்லலாம் என்று சுரேஷ் நாயர் கூறினான். தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி கோத்ராவிற்கு வந்தோம். சுரேஷ் நாயர், முகேஷ் வாஸ்னி, ஹர்ஷாத் ராஜ் ஆகியோரும் இதர மூன்று பேரும் அங்கே காத்திருந்தோம். கோத்ராவில் இருந்து புறப்பட்ட குழுவினர் மறுநாள் 11-ஆம் தேதி அஜ்மீரை அடைந்தோம். மாலையில் தர்காவிற்கு சென்ற குழுவினர் குண்டை வைத்தனர். ஆனால், அஜ்மீர் பயணத்தின் நோக்கம் குறித்து எனக்கு தெரியாது. அஹ்மதாபாத்திற்கு திரும்ப செல்ல பேருந்தில் ஏறும் போது சுரேஷ் நாயர் அஜ்மீர் செல்வதன் நோக்கத்தை கூறினான். அஜ்மீர் தர்காவில் குண்டு வைக்கும் திட்டத்தை தயாரித்தவர் மனோஜ் பாய் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி ஆவான். இவ்வாறு பவேஷ் பட்டேல் தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
 
    அஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கும் திட்டத்தை தயாரித்த சுனில் ஜோஷியை சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹிந்துத்துவா தீவிரவாதிகளே சுட்டுக்கொலைச் செய்துள்ளனர். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஹர்ஷத் ராஜ் முன்னர் கைதுச் செய்யப்பட்டான். தலைக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதி சுரேஷ் நாயர் பல வருடங்களாக தலைமறைவாக உள்ளான். ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சூத்திரதாரிகளான ராம்ஜி கல்சங்கராவும், சந்தீப் டாங்கேவும் தலைமறைவாக உள்ளனர்.

0 comments:

Post a Comment