Monday, April 15, 2013

கருணாநிதி, ஸ்டாலின் ஊழல் மன்னர்கள்.. அம்பலப்படுத்திய நக்கீரன் பத்திரிகை..

DSC_0147[1] 22THRAJAGOPAL_761497f
 
நெற்றிக்கண்திறப்பினும்குற்றம்குற்றமேஎன்றவாசகங்களுடன்வெளிவரும்நக்கீரன்பத்திரிகைஏப்ரல்13-16 இதழில்ஜெ.ஆட்சியில்கோடிகோடியாய்கொள்ளை! தமிழகத்தைசுட்டெரிக்கும்ஊழல்என்றுசெய்திவெளியாகிஉள்ளது..
     
     இந்த செய்தியை படித்தவுடன், சிரிப்புதான் வருகிறது. 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த ஊழலை சாம்ராஜ்யத்தைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அதாவது 2006-11ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஊழல் மன்னர்கள் என்பதை தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளார்கள்..
 
      இதற்கு நக்கீரன் பத்திரிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியுமா? நக்கீரன் பத்திரிகை நீடுழி வாழ மக்கள்செய்திமையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
     தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் சூத்ரதாரியா இருப்பவர் கோபாலகிருஷ்ணன்தான் காரணம். என்ஜினியரிங் சீப் ஜெனரல் என்கிற உயர்பதவியிலும் உட்கார்ந்துவிட்டார். அதனால் மற்ற இரண்டு மண்டல சி.இக்களும் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டனர். இவரும் டெக்னிக்கல் பி.ஏ காமராஜூம்தான் துறையின் அத்தனை கோல்மால்களுக்கும் ரூட் போடறவங்க..
 
     இதில் கோபாலகிருஷ்ணனின் பதவிக்காலம் போன மே யிலேயே முடிந்தாலும், இவர் சரியா டீலிங்குகளை கவனிப்பதால் அவரை இன்னுமும் பதவி நீட்டிப்பில் உட்கார வச்சிருக்காங்க..
 
     மூன்று மாதத்திற்கு முன் இவரது மகள் திருமணம் நடந்தது. 1500 பத்து கிராம் தங்க காசுகல் துறை அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் மூலம் மொய்யாக கிடைத்தது என்று புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்..
 
     நக்கீரன் செய்தியில் கூறப்பட்டுள்ள பொதுப்பணித்துறை என்ஜினியரிங் சீப் ஜெனரல் கோபாலகிருஷ்ணன்தான், திமுக ஆட்சியில் கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் மேற்பார்வையில் கட்டப்பட்டது. அந்த கட்டிட பணி முடியும் வரை கோபாலகிருஷ்ணனிடம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மூவரிடமும் 24மணி நேரமும் தொடர்புக்கொள்ளலாம். அந்த அளவுக்கு கோபாலகிருஷ்ணனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது.
 
     குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிந்து அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் 201ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது.
 
      திறப்பு விழா முடிந்ததும், முதலமைச்சர் கருணாநிதி, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அழைத்தும் வரும்படி கூறினார்.. கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட கோபாலகிருஷ்ணனை கைப்பிடித்து வாழ்த்துக்கள் சொன்னார் முதலமைச்சர் கருணாநிதி. அறிஞர் அண்ணா நூலகத்தை கட்டிமுடிக்க இரவு பகலும் கண் விழித்து சிறப்பாக பணிமுடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் கருணாநிதி..
 
     அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் பணி முடிந்ததும், தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஒரங்கட்டப்பட்டார்..
 
     பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குள் நடந்த குழப்பதால், கோபாலகிருஷ்ணன் தாட்கோவில் கண்காணிப்பு பொறியாளர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு கோபாலகிருஷ்ணனுக்காக முதலமைச்சர் கருணாநிதியிடம் பேசினார். ஆனால் துணை முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள், முதலமைச்சரின் செயலாளர் ராஜரத்தினம் கோபாலகிருஷ்ணனுக்கு எதிராக செயல்ப்பட்டார்கள்..
Karunanidhi_20101210 gopal..1
 
     ஆனால் ஒமாந்தூர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிகளை கவனித்து வந்த கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் மற்றும் தலைமை பொறியாளர் இருவரும் சரியாக பணிகளை கண்காணிக்காமல், கட்டுமான பணி முடங்கி போனது.
 
     முதலமைச்சர் கருணாநிதியின் ஆசையான, சட்டமன்றத்தை புதிய தலைமை செயலகத்தில் நடத்த வேண்டும் என்ற ஆசை, நிராசையாக போய்விடும் நிலை ஏற்பட்டது.
 
     நக்கீரன் பத்திரிகையின் இணை ஆசிரியர் பெரம்பலூர் அ.காமராஜ், திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். காமராஜ் சொல்வதை கருணாநிதி கண்ணை மூடிக்கொண்டு கேட்பார்.
 
     புதிய தலைமை செயலக பணி தொடர்பாக, முதலமைச்சர் கருணாநிதி நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜூடம் புலம்ப, நூலகம் கட்டிய கோபாலகிருஷ்ணனிடம் பொறுப்பை ஒப்படைத்தால், பணி சீக்கிரம் முடியும் உங்கள் ஆசையும் நிறைவேறும் என்று கூற, உடனடியாக கண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அழைத்து வரப்பட்டார். மீண்டும் கோபாலகிருஷ்ணனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
 
     இரவு, விடியற்காலை என்று முதலமைச்சர் கருணாநிதியே கோபாலகிருஷ்ணனுக்கு போன் செய்து, நான் கருணாநிதி பேசுறேன், புதிய தலைமை செயலகம் வா என்பார், அடுத்த 30 நிமிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி பார்வையிட வருவதற்குள் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்துவிடுவார்கள்..
 
     முதலமைச்சர் கருணாநிதி விரும்பியபடி புதிய தலைமைச் செயலகத்தில் சட்டசபை கட்டிட பணிகளை முடித்து, அங்கு சட்டசபையும் நடந்தது. கண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணனை அழைத்து, முதலமைச்சர் கருணாநிதி பொன்னடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்..
 
     அந்த அளவுக்கு முதலமைச்சர் கருணாநிதியால் பாராட்டுப் பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணனைதான் ஊழல் திலகம், கமிசன் சூத்ரதாரி என்று நக்கீரன் பத்திரிகையில் வர்ணித்துள்ளார்கள்..
 
      திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த திருச்சி கே.என்.நேரு( நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜூம், நேருவும் ஒரே ஜாதி), நக்கீரன் இணை ஆசிரியர் பெரம்பலூர் அ.காமராஜ், போக்குவரத்து செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி ஐ.ஏ.எஸ் மூவரும் அடித்த கூத்தை மறக்க முடியாது.
 
     செயலாளர் சாரங்கி ஐ.ஏ.எஸ் தினமும் காலை அமைச்சர் நேருவுக்கு போன் செய்யும் முன்பு நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜூக்கு போன் செய்து காலை வணக்கம் சொல்லுவார்/சொன்னார்.
 
     அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைமை பொறியாளர் பதவி உயர்வு பெற்று தலைமை செயலாளராக இருந்த சாரங்கி ஆதரவுடன், தலைமை பொறியாளர் கட்டிடம் பதவியை பெற்றார்.
 
     2012 மே மாதம் ஒய்வு பெற வேண்டிய தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணனுக்கு, பதவி நீட்டிப்பு கொடுக்க, முடிவு செய்த தலைமை செயலாளர் சாரங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் அழைத்து, கோபாலகிருஷ்ணனுக்கு ஒராண்டுக்கு நீட்டிப்பு கோப்பு உடனடியாக அனுப்பும்படி கூறினார். கோப்பு ஒரு மணி நேரத்தில் தலைமை செயலாளர் அலுவலகம் வந்தது. அடுத்த சில மணி நேரங்களில் முதல்வர் அவர்களின் கையெழுத்து பெற்று நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டது.
 
     தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் சாரங்கி, முதல்வரின் செயலாளர் கம் நிழல் முதலமைச்சர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் இந்த மூவர் அணி, புதிய தலைமை செயலகம் ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிசன் செயல்படாதபடி பார்த்துக்கொண்டார்கள்..
 
     இப்படி கோபாலகிருஷ்ணனின் சரித்திரம் இருக்கும் போது, நக்கீரன் பத்திரிகை கண்ணை மூடிக்கொண்டு எழுதுகிறது..
 
     கோபாலகிருஷ்ணன் ஊழல் செய்தார் என்றால், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இருவரும் ஊழல் செய்தார்கள் என்று அர்த்தம்.
 
     இப்ப ஊழல் செய்த கோபாலகிருஷ்ணன், அறிஞர் அண்ணா நூற்றாண்டுவிழா கட்டிட பணியிலும், புதிய தலைமை செயலக கட்டிட கட்டுமான பணியிலும் ஊழல் செய்யவில்லை என்று நக்கீரன் பத்திரிகையால் நிருபிக்க முடியுமா?
 
     திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்த போது, கமிசன் தகராறில் பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டு, முதலமைச்சர் கருணாநிதியே தன்னிடம் வைத்துக்கொண்டார்.
 
sarangai Jayalalitha_Reuters_3805
 
     மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பொதுப்பணித்துறையில் கமிசன் அதிகமாக கேட்பதால், ஒப்பந்தகாரர்கள் வேலை எடுக்க முன்வர தயங்குகிறார்கள். அதனால் இனி பொதுப்பணித்துறையில் புதிய கட்டிட பணிகளுக்கு 6 சதவிகித கமிசன், பழைய கட்டிட பணி மற்றும் பராமரிப்பு பணிக்கு 10 கமிசன், நீர்பாசனம் அதாவது ஏரி, குளம், வாய்க்கால் தூர் வாரும் பணிக்கு 12சதவிகிதம் என முதலமைச்சர் கருணாநிதி நிர்ணயம் செய்தார்.
 
     கமிசன் எவ்வளவு என்று முதலமைச்சர் கருணாநிதியே நிர்ணயம் செய்த ஒரே நாடு தமிழ்நாடுதான்…
 
      2006-11 திமுக ஆட்சியில், முதலமைச்சர் கருணாநிதியும், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஊழல் மன்னர்கள் என்பதை நக்கீரன் மறைமுகமாக அம்பலத்துக்கு கொண்டு வந்ததற்கு மக்கள்செய்திமையம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
                  
மக்கள்செய்திமையம் 15.4.13 இரவு 7மணி thanks,

0 comments:

Post a Comment