ஏப்ரல் 24/2013: இந்தி படவுலகில் முடிசூடா மன்னர்களாக சுனில்தத் மற்றும் அவரது மகன் சஞ்சய்தத் இருவரும் திகழ்ந்தார்கள்.
சுனில்தத் அரசியலில் இறங்கி ஓய்வு பெரும் நேரம் மகன் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இவர் நடித்த கல்நாயக், ஜாஜல், சடக் போன்ற ஹிந்தி படங்கள் மிகபிரபல்யம் ஆனவை.
இன்றைய நிலை: மும்பை நரிமன் பாயிண்ட்யில் உள்ள சிபிஐ அலுவுலகத்திற்கு ஏறி இறங்குவதுதான் இந்த பிரபல்யங்களின் இன்றைய அவலநிலை.
மும்பை கலவரம்: 1992 டிசம்பர் 6 தேசமே பெரும் கொந்தளிப்பில் இருந்த நேரம், உச்சநீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவின் வர்த்தக தலை நகரான மும்பையில் சிவசேனா மற்றும் ஹிந்துத்துவா அமைப்பு பெரும் கலவரத்தை நடத்தியது. இதில் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் எரித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

மனித நேயம்: 2 மாதங்கள் நடந்த தொடர் கலவரத்தை கண்டு மனித நேயம் கொண்ட பலர் கவலை கொண்டனர். அதில் சுனில்தத்தும் ஒருவர். இவர் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரத்தை நிறுத்த பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டார்.
உண்ணாவிரதம்: பால்தாக்ரே தலைமையில் இயங்கும் சிவசேனா, மற்றும் ஹிந்துத்துவா அமைப்பினர் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தை நிறுத்த வலியுறுத்தி சுனில்தத் மும்பை விதான் சவுத் என்கிற இடத்தில் தைரியமாக உண்ணாவிரதம் இருந்தார்.
அரசுக்கு நெருக்கடி: MPயும் நடிகருமான சுனில்தத்தின் உண்ணாவிரதம் மத்திய, மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியது. தனது கட்சியின் உள்ள நடிகர் மற்றும் பிரபல்யமான MP ஒருவரே தங்களது ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதை நரசிம்மராவ் தலைமையில் நடந்த காங்கிரஸ் (ஹிந்துத்துவா) ஆட்சி விரும்பவில்லை.
ரகசிய கூட்டு: காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற கட்சிகள் பெயரளவில்தான் வேறு பட்ட கட்சிகளே தவிர செயல்பாடுகளில் ஒரே சிந்தனை படைத்த இரட்டையர்களே . பாபர் மசூதியை இடிக்க பிரதமர் நரசிம்மராவ் (காங்கிரஸ்) ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பச்சை கொடி காட்டி இருந்தார். பாபர் மசூதியை இடித்து விட்டு அதில் ராமர் கோவில் கெட்ட வேண்டும் என்பதே நரசிம்மராவின் எண்ணமாக இருந்தது.
மாநில காங்கிரஸ்: மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சி சிவசேனாவின் மறு உருவமாகவே செயல்பட்டது என்றே சொல்லலாம். தொடர்ந்து 2 மாதங்கள் நடந்த கலவரத்தை தடுத்து நிறுத்த ஆளும் மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகள் உறுப்படியாக எதுவும் செய்திருக்கவில்லை. இதனை கண்டு மனம் வெறுத்து போனதாலேயே சுனில்தத் கலவரத்தை நிறுத்த நாடவடிக்கைகள் எடுக்க கோரி உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலவரம் நிறுத்தப்பட்டது: எம்பியும், நடிகருமான சுனில்தத்தின் உண்ணாவிரத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியது. தமிழக சினிமா துறையினர் போலல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு மும்பை திரை துறையினர் ஆதரவு நல்கினர். சுனில்தத்தின் உண்ணாவிரதம் காரணமாக ஏற்ப்பட்ட நெருக்கடி காரணமாக கலவரம் நிறுத்தப்பட்டது.
சுனில்தத் வழங்கிய நிவாரணம்: மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவு பொருட்களை கொடுத்து உதவினார். இவரது இந்த உதவிகளை கண்டு ஹிந்துத்துவா சக்திகள் இவர் மீது தீரா பகை கொண்டது.
திசை திரும்பிய கலவரம்: இவரது உண்ணாவிரதத்தால் கலவரம் முடிவுக்கு வந்தது. ஆனால் கலவரத்தை நிறுத்த உதவி செய்ய உண்ணாவிரதம் இருத்தவர்களை நோக்கி கலவரம் திசை திரும்பியது. பொலிவுட் பிரபலங்கள் வசித்து வந்த ஜூகு பீச் பகுதியின் பாதுகாப்பு கேள்வி குறியானது.
கொலை மிரட்டல்: இந்நிலையில் சுனில்தத்தின் குடும்பத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. காங்கிரஸ் எம்பியான இவர் மாநில மற்றும் மத்திய அரசிடம் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டினார். இவரது உண்ணாவிரத நடவடிக்கையால் இவர் மேல் சிவசேனையும் அதன் ஆதரவு காவல் மற்றும் உளவு துறையினரும், மத்திய, மாநில அரசுகளும் விரோதம் கொண்டிருந்தன. அதனால் இவரது குடும்பத்தை பாதுகாக்க ஒரு போலீசை கூட அவர்கள் அனுப்பிவைக்க வில்லை.
வீடு முற்றுகை: இந்நிலையில் ஒருநாள் இரவு சிவசேனை மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுனில்தத்தின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த தருணத்தில் ராணுவத்தில் வேலை செய்யும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது சக ராணுவ நண்பர்களோடு அவருக்கு பாதுகாப்பு கொடுத்தார். இல்லையேல் குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஹ்சான் ஜப்ரியின் நிலைமையே இவருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.
சஞ்சய்தத் செய்த தவறு: சுனில்தத்தின் மகன் சஞ்சய்தத் தனது குடும்பத்தினருக்கு நிலவி வரும் பாதுகாப்பு அற்ற சூழலை கண்டு மனம் வருந்தினார். இந்நிலையில் சஞ்சய்தத்தின் நெருங்கிய நண்பர்களான மும்பை தயாரிப்பாளர்கள் இருவர் எ.கே 56 ரக இயந்திர துப்பாக்கியை இவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி கொடுத்து உதவுகின்றனர். வேறுவழியின்றி இதை பெற்று கொண்டதுதான் இவர் செய்த தவறு.
இது குற்றமா?: சஞ்சய்தத் ஒன்றும் ஆயுத வியாபாரி இல்லை. அந்த துப்பாக்கியை அவர் உபோயோகப்படுத்தவும் இல்லை. அவர் பெயரில் இதுவரை ஒரு கேஸ் கூட இருந்ததில்லை. அவரது வீட்டை ரைடு செய்த போலீஸ் அங்கிருந்து இந்த துப்பாக்கியை கைப்பற்றவும் இல்லை. ஆனால் இந்த துப்பாக்கி அவரிடம் இருந்தது என்கிற சாட்சியை வைத்து மட்டுமே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
சூழ்ச்சியான முறையில் கைது: இந்த பிரச்சனைகள் நடக்கும் பொழுது நடிகர் சஞ்சய்தத் மொரீசியஸ் தீவில் படபிடிப்பில் இருந்தார். இவருக்கு போன் செய்த மும்பை போலீஸ், நீங்கள் மும்பை வரை வந்து உங்கள் வசம் துப்பாக்கி இருந்தததை ஒத்துக்கொண்டால் போதும், உங்கள் மீதுபெட்டி கேஸ் போட்டு விட்டு விடுவோம் என்று பொய்யாக வாக்குறுதி கொடுத்து அழைத்து பின்னர் கைது செய்தனர்.
திட்டமிட்டு பொய் வழக்குகள்: சஞ்சய்தத் மீது அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்தார் என்கிற ஒரு குற்றத்திற்காக மட்டுமே வழக்கு தொடர முடியும். அது கூட அவர் தனது குடும்பத்தினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிர்பந்தத்தின் காரணமாக அதை செய்தார். ஆனால் மும்பை பால்தாக்ரே ஆதரவு உளவுத்துறையோ இவரை குண்டு வெடிப்பு மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு ஏற்படுத்தி தடாவில் கைது செய்தது.
பழிவாங்கப்பட்ட சஞ்சய்தத்: மும்பை நகரமே பால்தாக்ரேயின் அடாவடி இனவாத, மாதவாத ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கி தவித்தது. கலவரத்தை நிறுத்திய குடுப்பத்தை அலைகழிக்க பால்தாக்ரேயும், உளவுத்துறையும் செய்த சதியே இந்த பொய் வழக்குகள். இவரது தந்தை ஆளும் காங்கிரஸ் எம்பியாக இருந்த பொழுதிலும் மத்திய, மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் பழிவாங்கப்பட்டனர்.
ஜாமீன் மறுப்பு: இவரது வழக்கு நீதிபதி பட்டேல் இடம் ஜாமீனுக்கு வந்தது. பால்தாக்ரேவின் ஆதரவாளரான இவர் சஞ்சய்தத்தின் ஜாமீனை மறுத்தார். இதனால் இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் இவர் 14 மாதங்கள் ஜெயிலில் கழித்தார். MP மற்றும் பெயரும் புகழும் படைத்த நடிகர் சுனில்தத்தால் கூட தனது மகனை காப்பாற்ற முடியவில்லை.
பால்தாக்ரேயிடம் சரண்: மகனை வெளியே எடுக்க வழி தெரியாமல் சுனில்தத் பால்தாக்ரேயிடம் சரண் அடைகிறார். இதற்கு பலன் கிடைத்தது. இதுநாள் வரை சஞ்சய் தத்துக்கு ஜாமீன் மறுத்து வந்த நீதிபதி பட்டேல், காலை, மாலை காவல் நிலைய கையெழுத்து, மும்பையை விட்டு வெளியேற கூடாது என்கிற கண்டிசன் அடிப்படையில் இவருக்கு ஜாமீன் வழங்கினார்.
புதிய நீதிபதி: சஞ்சய்தத் வழக்கில் புதிய திருப்பமாக வந்தார் நிதியரசர் பிரோமோதத். இவர் சஞ்சய்தத்தின் வழக்கின் உண்மை நிலைககளை ஆராய்ந்து இவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான தடா மற்றும் வழக்குகளில் இருந்து இவரை விடுவித்து இவருக்கு முழுமையான் ஜாமீன் வழங்கினார். இப்பொழுது இவர் மீது ஆர்ம் ஆக்ட் படி தொடரப்பட்ட வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது.
சரியான தண்டனையா?: இந்நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இவருக்கு விதிக்கப்பட்ட 5 வருட கால தண்டனையில் இவர் இன்னும் 3 வருட காலங்களை மட்டும் அனுபவித்தால் போதும் என்று கூறி இருக்கிறது. தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்த மத்திய, மாநில அரசுகளின் நிர்பந்தத்தால் ஒரு குடிமகன் வெறிபிடித்த பெரும் கூட்டத்திடம் இருந்து தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்ததற்கு 5 வருடங்கள் சிறைதண்டனையா?
இறந்து போன நீதி: மும்பை கலவரத்திற்கு காரணம் பால்தாக்ரே மற்றும் சிவசேனா தான் என இந்த படுகொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இருந்தும் பால்தாக்ரேக்கு யார் தண்டனை கொடுத்தார்கள்? பால்தாக்ரே சொன்னார் தன்னை கைது செய்தால் மும்பை நகரமே பற்றி எறியும் என்றார். கடைசியில் அவர் மரணித்ததும் அவரது உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி இந்தியா அறிவிக்கப்படாத இந்து தேசம் என்பதை நிரூபித்தார்கள்.
கவலையான செய்தி: சுனில்தத் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவ போய் பெற்ற துன்பங்கள்தான் இவை அனைத்தும். இதை புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் இவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் வருகின்றனர். முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சுனில்தத் உங்களுக்கு உதவியதாலேயே அவரது மகன் சஞ்சய்தத் சிறை தண்டனை பெற்றார். இதை புரிந்து கொள்ளாமல் அவருக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் மனிதாபிமானம் அற்ற செயல்.

*ஆயிரம் குற்றாவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது* (நீதி மொழி).
ஆனால் சஞ்சய்தத் விசயத்தில் மும்பை கலவரத்தை நடத்திய பால்தாக்ரே மற்றும் ஹிந்துத்துவா குற்றாவளிகள் தப்பிக்க விடப்பட்டு நிரபராதியான சஞ்சய்தத் தண்டிக்கப்படுள்ளார்.
நட்புடன்: ஆசிரியர் புதியதேன்றல்.
நன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ். thanks, sinthikkavum
0 comments:
Post a Comment