Sunday, April 28, 2013

அமெரிக்காவின் தொடரும் இஸ்லாமோஃபோபியா: உ.பி அமைச்சர் ஆஸம்கான் விமானநிலையத்தில் தடுத்து வைப்பு!

                     27 Apr 2013 UP-minister-at-Boston-airpo
 
     நியூயார்க்:உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுடன் சென்ற அம்மாநில அமைச்சர் ஆஸம் கானை முஸ்லிம் என்ற காரணத்தால் சோதனை என்ற பெயரில் பாஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரை 10 நிமிடங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்தனர். இந்தியாவில் இருந்து பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் அகிலேஷ் யாதவுடன் ஆஸம் கான் அமெரிக்கா சென்றார். ஹாவேட் பல்கலைக் கழக சிம்போஸியத்தில் பங்கேற்கவே இருவரும் அமெரிக்கா சென்றனர். ஆஸம் கானிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக இந்திய தூதரகம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமது கவலையை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தவிர்க்கநடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாகவும் இந்திய தூதரக செய்தி தொடர்பாளர் எம்.ஸ்ரீதரன் கூறினார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் ஆகியோர் அமெரிக்க விமானநிலையங்களில் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment