Monday, April 22, 2013

பாஸ்டன் குண்டுவெடிப்பு:எஃப்.பி.ஐ பொய் கூறுவதாக குற்றம் சாட்டப்பட்டவரின் தாயார் பேட்டி!

22 Apr 2013
 
     வாஷிங்டன்:பாஸ்டன் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று எஃப்.பி.ஐ கூறும் தேமர்லைன் சர்னாயேவை பல வருடங்களாக போலீஸ் பின் தொடருவதாக அவரதுதாயார் சுபைதத் சர்னாயேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
    வெள்ளிக்கிழமை காலை போலீசுடன் நடந்த மோதலில் தேமர்லைன் கொல்லப்பட்டதாகவும், அவரது சகோதரர் யோக்கரை கடுமையான காயங்களுடன் கைதுச் செய்ததாகவும் எஃப்.பி.ஐ கூறுகிறது. ரஷ்யா டுடேக்கு அளித்த பேட்டியில் சுபைதத் சர்னாயேவ் கூறியது:எனது மகனை ஐந்து ஆண்டுகளாக எஃபி.பி.ஐ கண்காணித்து வருகிறது. எனது மகன் என்னவெல்லாம் செய்கிறார்? இணையதளத்தில் என்ன பக்கங்களை பார்வையிடுகிறார்? என்பது எஃப்.பி.ஐக்கு தெரியும். எனது மகனின் அனைத்து சலனங்களையும் கண்காணித்து வந்த எஃப்.பி.ஐ, தற்போது அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது. இதுவெல்லாம் சுத்த பொய்களாகும். தங்களை எஃப்.பி.ஐகண்காணிப்பது தெரியும் என்பதால் எனது மகன்கள் நாசவேலைகளில் ஒரு போதும் நடத்த தயாராகியிருக்கமாட்டார்கள். இதுவெல்லாம் எஃபி.பி.ஐ தயாராக்கியது என்பதை 100 சதவீதம் என்னால் உறுதியாக கூறமுடியும். எனது 2 பிள்ளைகளும் நிரபாரதிகளாவர். இவ்வாறு சுபைதத் கூறியுள்ளார்.

     அமெரிக்காவில் இருந்து திரும்பிய சுபைதத் தற்போது ரஷ்யாவின் தாஜெஸ்தானில் வசித்து வருகிறார் .நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து வெளிநாட்டினருக்கு எதிரான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டதால் கணவருடன் ரஷ்யாவிற்கு திரும்பியதாக சுபைதத் கூறுகிறார். 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தேமர்லைனுடன், எஃப்.பி.ஐ அதிகாரிகள் பேசியதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். உடனடியாக குற்றவாளிகளை பிடித்ததாக கூறுவதற்கு 2 செச்சன் இளைஞர்களை எஃப்.பி.ஐ பலிகடாவாக்கியதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேவேளையில் காயமடைந்த யோக்கர் சர்னாயேவின் உடல்நிலையில் போதுமானமுன்னேற்றம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
    கழுத்தில் குண்டு தாக்கியதால் நாக்கில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.அவரால் பேச முடியாது என்று, விசாரணையில் இடையூறு ஏற்படுதவாதகவும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர்கள் வாக்குமூலம் வாங்குவதற்காக மாசேசூட்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தபோதும் வாக்குமூலம் பெறமுடியாமல் திரும்பினர்.
 
     இவ்வழக்குவிசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்படும் நபர்களின் நாடான செச்னியாவுக்கு எஃப்.பி.ஐ அதிகாரிகள் செல்வார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

0 comments:

Post a Comment