Tuesday, April 16, 2013

ஃபலஸ்தீன் பிரதமர் ராஜினாமா!

                      16 Apr 2013 Palestinian president accepts resignation of PM Salam Fayyad
 
     ராமல்லா:ஃபலஸ்தீன் பிரதமர் ஸலாம் ஃபய்யாத் ராஜினாமாச் செய்துள்ளார். சனிக்கிழமை அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் ராஜினாமாக் கடிதம் வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய அரசை நியமிக்கும் வரை இடைக்கால பிரதமராக தொடருமாறு அப்பாஸ், ஃபய்யாதிடம் கோரிக்கை விடுத்தார்.
 
     நாட்டின் பொருளாதார கொள்கைகளில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே ராஜிமானாவுக்கு காரணம். ஃபய்யாதிற்கும், அப்பாஸிற்கும்இடையேயான கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு காண அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி தலையிட்டபோது தீர்வு ஏற்படவில்லை.
 
     அப்பாஸுடனான கருத்துவேறுபாட்டைத் தொடர்ந்து நிதியமைச்சர் நபீல் கமீசும் கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
 
     ஃபயாதின் ராஜினாமாவை ஹமாஸ் வரவேற்றுள்ளது. இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஃபயாதின் ராஜினாமா பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் ஃபலஸ்தீன் ஆணையத்தின் பிரதமராக ஃபய்யாத் இருந்து வருகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் அதிகாரியுமான ஃபய்யாத், சர்வதேச அளவில் பிரபலமான தலைவர் ஆவார்.
 
     பிரதமராக பதவி வகித்தபோது ஃபய்யாத், மஹ்மூத் அப்பாஸின் கட்சியில் உறுப்பினர் கிடையாது.ஹமாஸ் இயக்கத்துடன் முற்றிலும் சுதந்திரமான நிலைப்பாட்டை கையாண்டிருந்தார் ஃபய்யாத்.

0 comments:

Post a Comment