Monday, April 15, 2013

சிலியில் பினோசட்டின் கொடூரங்களை வாடிகன் நிராகரித்தது – விக்கிலீக்ஸ்!

augusto
     லண்டன்:சிலி நாட்டில் ராணுவ ஆட்சியாளராக இருந்த அகஸ்டோ பினோசட்டின் கொடூரங்களை கம்யூனிஸ்டுகளின் பொய்ப்பிரச்சாரம் என்று வாடிகன் நிராகரித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக ஆவணங்கள் கூறுகின்றன.
 
1973-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி வாடிகனில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட ரகசிய ஆவணங்களில் கத்தோலிக்க அவையின் தலைமை பீடத்திற்கும்,ஏகாதிபத்தியவாதி பினோசட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறது. வாடிகனின் அன்றைய வெளியுறவு துணைச் செயலாளர் கியோவனி பெனில்லி, முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹென்ரி கிசிங்கருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
 
    சிலியில் உண்மைகளை தவறாக வெளியிடும் கம்யூனிஸ்டு பிரச்சாரங்கள் வெற்றிப் பெறுவதில் போப்பிற்கு கவலை ஏற்பட்டுள்ளதாகவும், கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரங்கள் உலகின் சுதந்திர ஊடகங்களில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது இது நிரூபிப்பதாகவும் அமெரிக்காவிற்கு பெனில்லி அனுப்பிய செய்தி குற்றம் சாட்டுகிறது.
 
     தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலண்டாவின் சோசியலிச அரசை கவிழ்த்துவிட்டு 1973-ஆம் ஆண்டு ராணுவ தளபதியான பினோசட் சிலியில் ஆட்சியை கைப்பற்றினார். 17 ஆண்டுகள் நீண்ட பினோஷாவின் கொடுமையான ஆட்சியில் 3200 பேர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் கைதுச் செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். பினோசட்டின் கொடூரங்களை வாடிகன் பின்னர் புரிந்துகொண்டது என்பது அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.
 
     ஆனால், பினோசட்டின் எதிர்க்க போப்போ, கத்தோலிக்க சபையோ தயாராகவில்லை. அதுமட்டுமல்ல, சிலியுடன் சாதாரணமாக தூதரக உறவை பேணிவந்துள்ளனர் என்பது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன

0 comments:

Post a Comment